Published:Updated:

அமெரிக்க பத்திரிகைக்கு பிரதமர் அலுவலகம் கண்டனம்!

Vikatan Correspondent
அமெரிக்க பத்திரிகைக்கு பிரதமர் அலுவலகம் கண்டனம்!
அமெரிக்க பத்திரிகைக்கு பிரதமர் அலுவலகம் கண்டனம்!
அமெரிக்க பத்திரிகைக்கு பிரதமர் அலுவலகம் கண்டனம்!

புதுடெல்லி:  ஊழல்வாதிகளை வழிநடத்துபவர் என்று இந்திய பிரதமர் மன்மோகன்  சிங்கைப் பற்றி செய்தி வெளியிட்டிருந்த அமெரிக்க பத்திரிகையான 'வாஷிங்டன்  போஸ்ட்’பத்திரிகைக்கு பிரதமர் அலுவலகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள கண்டன செய்தியில்,"இந்த செய்தி  முற்றிலும் ஒரு தலைபட்சமானது. இதில் பிரதமரின் கருத்து கேட்கப்படவில்லை. ஒரு  பிரச்னை குறித்து எழுதுவதற்கு பத்திரிக்கைக்கு முழுச் சுதந்திரம் உள்ளது.

ஆனால், பிரதமர் குறித்து வெளியிடப்பட்ட செய்தியில் நியாயமற்ற, பத்திரிக்கை  தர்மத்தை மீறிய பல தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது ” என்று கூறப்பட்டுள்ளது.