'மத பிரசார கூட்டங்களில் தாங்கள் கலந்து கொள்ளக் கூடாது. மீறினால் தங்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை பாயும்’ என்று தமிழக அரசின் ஒழுங்கு நடவடிக்கை துறை கமிஷனர் உமா சங்கருக்கு தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியது தொடர்பாக பல்வேறு விவாதங்கள் நடைபெற்றுவரும் நிலையில், உமா சங்கரை அவரது இல்லத்தில் சந்தித்தோம்.

'யேசு மீது தங்களுக்கு ஈடுபாடு வர என்ன காரணம்?'

'அ.தி.மு.க ஆட்சியில் 5 ஆண்டு காலம் முக்கியத்துவம் இல்லாத பதவியில் என்னை ஜெயலலிதா வைத்திருந்த நிலையில், 2008-ல் 'எல்காட்’ நிர்வாக இயக்குனர் பொறுப்பை தி.மு.க அரசு எனக்குக் கொடுத்தது. அதை ஏற்றுக்கொண்டு திருப்திகரமாகப் பணியாற்றினேன். அப்போதுதான், அரசு நிறுவனமான 'ஈ.டி.எல்’ கம்பெனி, ஒட்டுமொத்தமாகக் காணாமல் போயிருந்தது. அதுதொடர்பாக விசாரிக்க ஆரம்பித்தேன். அன்று மாலையே என்னை டிரான்ஸ்ஃபர் செய்துவிட்டார்கள். தவறு செய்தவர்கள் பற்றி அரசுக்கு அறிக்கை கொடுத்தும் அதன்மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

'எல்காட்’ பிரச்னைக்குப் பிறகு எனக்கு நம்பிக்கையே போய்விட்டது. செத்துவிடலாமா என்றுகூட நினைத்தேன். சின்னக் குழந்தையைப் போல பல நாட்கள் அழுதிருக்கிறேன். அந்த அளவுக்கு என்னை மாறி மாறிப் பந்தாடினார்கள். நிம்மதியைத் தேடி மனது அலைந்தது. சபைகளுக்குச் செல்ல ஆரம்பித்தேன். அப்போது, 'டிக்’ நிறுவனத்தில் இருந்தேன். அங்கிருந்து 'அரசு கேபிள்’ நிறுவனத்துக்கு மாற்றினார்கள். நேர்மையாக இருந்ததால் அங்கேயும் அடி விழ ஆரம்பித்தது. நம்பியவர்கள் அனைவரும் கழுத்தை அறுத்தார்கள். அப்போது, யேசு என்னை மீட்டெடுத்தார்.

2010 பிப்ரவரி மாதம் யேசு என்னிடம் நேரடியாகப் பேச ஆரம்பித்தார். 'இஸ்ரவேலின் மீட்புக்காக பிரார்த்தனை செய்’ என்று சொன்னார். 2011 ஏப்ரல் மாதத்திலேயும் ஒருமுறை பேசினார். இப்போதெல்லாம், யேசு நேரடியாகவே என் முதுகில் கைவைப்பது போன்ற உணர்வு இருக்கிறது. யேசு தன்னுடைய வல்லமையை எனக்குக் கொடுத்திருக்கிறார்.'

'அது உங்களது தனிப்பட்ட விருப்பம் சார்ந்தது. ஆனால் மதமாற்றம் செய்வதாக உங்கள் மீது புகார் சொல்கிறார்களே?'

'மதமாற்றம் செய்வது என் வேலை அல்ல. அதை மனிதன் செய்ய முடியாது. யாரையும் யாரும் மாற்ற முடியாது. என்னை மதமாற்றம் செய்தது யார்? நானே உணர்ந்து விரும்பி இதைத் தேர்ந்தெடுத்தேன். நான் யாரையும் மதமாற்றம் செய்யவில்லை. கிருத்துவத்தை மதம் என்று சுருக்கிவிட முடியாது. நான் யேசுவோட பக்தன். அவர் சொன்னதை மக்களிடம் கொண்டுபோய் சேர்க்கிறேன். அவ்வளவுதான். '

'அதற்காக அரசு ஊழியர் ஒருவர் மதப்பிரசாரத்தில் ஈடுபடுவது தவறில்லையா?'

'அரசு ஊழியர்கள் பிரசாரத்தில் ஈடுபடுவது தவறே இல்லை என்பது என் கருத்து. மாவட்ட ஆட்சியராக இருக்கும்போது பிரசாரங்களில் ஈடுபட்டால் சுட்டிக்காட்டலாம். இப்போது நான் இருக்கும் துறையில் வேலையே கிடையாது. இது எந்த விதத்திலும் ஐ.ஏ.எஸ் பணியை பாதிக்காது. பணி விதிமுறைகள்படி இது தவறு கிடையாது. டி.என்.சேஷன் உட்பட பல அரசு அதிகாரிகளும் காஞ்சிபுரம் சென்று சங்கராச்சாரியார் முன்னால் சட்டையைக் கழற்றி கீழே உட்காருவார்கள். அதையெல்லாம் யாரும் கேட்க மாட்டார்கள். அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை நடத்துகிறார்கள். அங்கு, ஐ.ஏ.எஸ் அதிகாரிகளே பூஜைகள் செய்கிறார்கள். அது தவறில்லையா? ஆனால், நான் அலுவலகம் அல்லாத நேரங்களில்தான் வெளியே செல்கிறேன். இது என் அடிப்படை உரிமை. இப்போதைக்கு பிரசங்கம் செய்வதை தற்காலிகமாக நிறுத்தி இருக்கிறேன். நான் சர்ச் சென்று பேசக் கூடாது என்று சொல்கிற அதிகாரம் யாருக்கும் இல்லை. இதனை நான் பல மாதங்களாகச் செய்கிறேனே!'

'இப்போது எதிர்ப்பு கிளம்புவதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்? பி.ஜே.பி ஆட்சிக்கு வந்திருப்பதுதான் உங்கள் மீதான தாக்குதலுக்குக் காரணமா?'

'அதுதான் முக்கியக் காரணம். மோடி பதவியேற்ற உடனேயே கிருத்துவர்களை தாக்க ஆரம்பித்துவிட்டார்கள். கடந்த நான்கு ஆண்டுகளாக கன்னியாகுமரியில் நடக்கும் கூட்டத்தில் கலந்துகொண்டு வருகிறேன். அப்போதெல்லாம் யாரும் எதுவும் செய்யவில்லை. இப்போது, புதிதாகப் பிரச்னையைக் கிளப்புகிறார்கள்.'

'எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபடும் எண்ணம் இருக்கிறதா?'

'எதையுமே நான் முடிவெடுக்க முடியாது. என் ஒவ்வோர் அடியையும் யேசுதான் தீர்மானிக்கிறார். அவர் என்ன சொல்கிறாரோ அதன்படி செயல்படுவேன். என்னை யாரும் கொல்ல முடியாது. எனக்குத் தோல்வி என்பதே கிடையாது. என் எதிர்காலம் மிகவும் சிறப்பாக இருக்கும். எதிர்காலத்தில் தமிழகம் மட்டுமில்லாமல், இந்தியாவிலும் அதிகாரமிக்க பதவியில் ஒரு நாள் அமர்வேன். இது உறுதி.'

நா.இள.அறவாழி

படம்: தி.ஹரிஹரன்