''அமைச்சர்கள் அனைவரும் ஸ்ரீரங்கம் போய்விட்டார்கள். பிப்ரவரி 13 வரை அவர்களுக்கு தலைமைச்செயலகத்தில் எந்த வேலையும் இல்லை!' என்றபடி என்ட்ரி கொடுத்தார் கழுகார்.

''அறநிலையத் துறையை அமைச்சர் காமராஜுக்கு மாற்றிக் கொடுத்திருக்கிறார்களே... செந்தூர் பாண்டியன் எப்படி இருக்கிறார்? அதை முதலில் சொல்லும்!'' என்று கேட்டோம்.

''அமைச்சர் செந்தூர் பாண்டியனுக்கு இன்னமும் நினைவு திரும்பவில்லை என்றாலும் கைகளை அசைக்கிறார். கண்விழித்துப் பார்க்கிறார். சில நாட்களில் பொது வார்டுக்கு மாற்றப்போகிறார்கள். அதன் பிறகு, மூன்று மாதங்கள் தொடர் சிகிச்சை கொடுக்கப்போகிறார்கள். 'உயிருக்கு ஆபத்து இல்லை. படிப்படியாக நினைவு திரும்பும்’ என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். அதனால்தான், அவரது துறையைக் கூடுதலாக உணவு அமைச்சர் காமராஜுக்கு ஒதுக்கியிருக்கிறார்கள். செந்தூர் பாண்டியன் உடல்நிலை குறித்து ஜெயலலிதா அவ்வப்போது கேட்டு வருகிறாராம்!'

''காமராஜுக்கு எப்படி அடித்தது சான்ஸ்? சசிகலா தம்பி திவாகரனுக்கு எதிராகச் செயல்பட்டவர் என்று சொல்வார்களே?'

''அதுதான் பலருக்கும் புரியவில்லை! ஆனால், ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகே திருவடி தெருவில் தேர்தல் வேலை செய்ய காமராஜுக்கு இடம் ஒதுக்கப்பட்டதாம். முதல்நாள் அங்கே போய் உட்கார்ந்த காமராஜுக்கு அடுத்த சில நிமிடங்களில் டி.வி நியூஸில், 'காமராஜுக்கு அறநிலையத் துறையை கூடுதல் பொறுப்பாக நியமித்துள்ளார்கள்’ என்று செய்தி வெளியானதாம். இதை சென்டிமென்டாகச் சொல்லி பூரித்துப்போகிறாராம் காமராஜ். தற்போதைக்கு துறை இல்லாத அமைச்சர் என்கிற பேனரில் செந்தூர் பாண்டியன் வைக்கப்பட்டிருக்கிறார்!'

''சிக்கலில் இருக்கிறார் என்று சொல்லப்பட்ட அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஸ்ரீரங்கம் வந்துவிட்டாரே!''

''அவருக்கு சிக்கல் என்று வெளியில்தான் சொன்னார்கள். நடந்ததை அவரும் மேலிடமும்தானே அறியும். 'அதில் எதுவும் உண்மை இல்லை’ என்று அவரது ஆதரவாளர்கள் சொல்கிறார்கள். 'அண்மையில் அதிகாலை நேரத்தில் எஸ்கார்டு இல்லாமல் காரில் எடப்பாடி பழனிச்சாமி பயணித்திருக்கிறார். அந்த சமயத்தில் கார் விபத்துக்குள்ளானதாம். அந்த விபத்தில் பழனிச்சாமியின் விலா எலும்பு ஒன்று உடைந்துபோனதாம். விபத்து நடந்து நெடுநேரமாகியும் யாரும் தூக்கிவிடக்கூட வரவில்லை. இந்த விஷயம் ஜெயலலிதாவுக்கு எட்டியதும், அவரைக் கூப்பிட்டு விசாரித்துவிட்டு மருத்துவச் சிகிச்சை முடியும் வரையில் முழு ஓய்வு எடுக்கும்படி அட்வைஸ் செய்து அனுப்பியிருக்கிறார்’ என்று அவரது ஆதரவாளர்கள் சொல்கிறார்கள். பிறகு முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தைக் கூப்பிட்டு, 'பழனிச்சாமி சொல்லித்தான் எனக்கே விஷயம் தெரியும்... சென்னைக்கு வெளியே செல்லும்போது அமைச்சர்களுக்கு எஸ்கார்ட் இல்லையாமே? அது தவறு. அனைவருக்கும் உடனே எஸ்கார்ட் அனுப்ப ஏற்பாடு செய்யுங்கள்’ என்றாராம். பழனிச்சாமி புண்ணியத்தில் எல்லா அமைச்சர்களும் எஸ்கார்ட் சகிதம் வலம் வருகிறார்கள். 'நடந்த கதையே வேற’ என்று சொல்பவர்களும் உண்டு!'

''ஸ்ரீரங்கம் தேர்தல் பிரசாரம் எப்படி இருக்கிறது?'

''காரைவிட்டு இறங்காத அமைச்சர்கள் எல்லாம் வீதிவீதியாக நடந்தே போகிறார்கள். வீடுவீடாக அவர்கள் வலம் வந்த பிறகு சில நிமிடங்களில் டிப்டாப் ஆசாமிகள் அதே வீட்டுக்கு வந்து விசாரித்துவிட்டு கொஞ்சம் பசை தடவுகிறார்களாம். 'உங்களுக்காகத்தான் நாங்க இருக்கோம். எலெக்ஷன் தேதிக்குள்ள இன்னும் ரெண்டு தடவை வருவோம்!’ என்று பூஸ்ட் கொடுக்கிறார்களாம். பிப்ரவரி 10-ம் தேதிக்குள் எல்லா செட்டில்மென்ட்டுகளையும் முடித்துவிட வேண்டுமாம் என்கிற இன்னொரு தகவலும் உலா வருகிறது. 'ஏரியாவில் உள்ள ரீசார்ஜ் கடைகளுக்கு பணம் கொடுத்து வைத்துள்ளார்கள். குறிப்பிட்ட கடைக்குப் போனால் கேட்கும் தொகைக்கு இலவசமாக ரீசார்ஜ் செய்துகொள்ளலாம்’ என்கிறார்கள். இதை தெரிந்துகொண்டு, இந்தக் கடையா, அந்தக் கடையா என்று அடையாளம் கண்டுபிடிக்க முடியாமல் அலைகிறார்கள். இன்னும் சிலரோ, 'எங்க தெரு மளிகைக் கடையிலும் அப்படி ஒரு ஸ்கீம் இருக்கிறதே?’ என்கிறார்கள்.'

''ம்!''

''அமைச்சர் நத்தம் விஸ்வநாதனும் கே.சி.வீரமணியும் பிராட்டியூர் என்ற இடத்தில் பிரசாரத்துக்குப் போனார்கள். அங்கே கட்சி அலுவலகத்தில் தயாராக வைத்திருந்த குலோப் ஜாமூனை அமைச்சர்களுக்குத் தர... இரண்டு பேருமே ஆளுக்கு ஒரு கப்பில் குலோப் ஜாமூன் சாப்பிட்டார்கள். 'ரொம்பா நல்லா இருக்கே.. இன்னொரு கப் கொடுங்கப்பா...’ என்று கேட்டு வாங்கி சாப்பிட்டார் நத்தம் விஸ்வநாதன். 'அம்மாவுக்கு தண்டனை கிடைச்ச சோகத்துல நாம இருக்கோம். இவரு ஏதோ கொண்டாட்டத்துக்கு வந்த மாதிரி ஸ்வீட் சாப்பிடுறாரு...’ என்றபடி கட்சிக்காரர்கள் சிலர் கமென்ட் அடித்தார்கள். பெரிய கருப்பூர் என்ற ஏரியாவுக்கு அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் பிரசாரத்துக்குப் போனார். அப்போது சிலர் உற்சாக மிகுதியில் வெடி போட... சத்தம் காதைப் பிளக்க... காதைப் பொத்திக் கொண்டார் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம்.''

''தி.மு.க என்ன செய்கிறது?'

''இப்போதுதான் லேசாக சூடு பிடிக்கிறது. கே.என்.நேரு வந்தால் கும்பல் கூடுகிறது. வேட்பாளர் ஆனந்த் தனியாகப் போனால் கூட்டம் அவ்வளவாக வருவதில்லை. தி.மு.க தலைமை தேர்தல் பணிக்குழுவில் இடம்பெற்ற பலரும் தங்கள் இடங்களை வந்து பார்த்துவிட்டு சொந்த ஊருக்கு சென்றுவிட்டார்கள். இன்னும் சிலர் வரவே இல்லை. அவர்களும் வந்து குவிந்தால் மட்டுமே சூடுபிடிக்கும். ஸ்டாலின் வந்த பிறகு களம் மாறும் என்கிறார்கள் தி.மு.கவினர். தேர்தல் செலவுக்கு என்ன செய்வது என்று தி.மு.க தலைமை யோசித்து, மாவட்டச் செயலாளர்களிடம் வசூல் செய்யச் சொல்லியிருக்கிறது. எ.வ.வேலு, ஒன்றுபட்ட திருவண்ணாமலை மாவட்டத்தின் சார்பில் ரூ.50 லட்சம் கொடுத்துவிட்டாராம். ஆள் ஆளுக்கு பத்து, பதினைந்து என்று கொடுத்துள்ளார்கள். வடக்கு மாவட்ட முன்னாள் அமைச்சர் ஒருவர், கட்சிக்காரர்களிடம் வசூல் செய்து பாதியை வைத்துக்கொண்டு மீதியை திருச்சி பக்கமாகத் திருப்பினாராம்!'

''ஆட்சியில் இல்லாவிட்டாலும் வசூல்தானா?'

''தி.மு.க வேட்பாளர் ஆனந்த்துக்கு செக் வைக்கும் வகையில் சுயேட்சையாக இன்னொரு ஆனந்தை அ.தி.மு.க களமிறக்க, தி.மு.க தரப்போ, அ.தி.மு.க வேட்பாளர் எஸ்.வளர்மதிக்கு போட்டியாக எஸ்.வளர்மதி, டி.வளர்மதி என இரண்டு பேரை சுயேட்சை வேட்பாளர்களாக்கியுள்ளார்கள். வாக்காளர்கள் மத்தியில் பெயர் குழப்பத்தை உண்டாக்குவதே இவர்கள் திட்டம்.

பி.ஜே.பி வேட்பாளர் சுப்பிரமணியம் மீது 3 வழக்குகள் உள்ளன. இதை அவர் வேட்புமனு பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடவில்லை என்று அ.தி.மு.க., காங்கிரஸ்காரர்கள் புகார் செய்தார்களாம். ஆனால், பி.ஜே.பி. தரப்போ, 'வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. எனவே, பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடவில்லை’ என்றார்களாம். நீண்ட ஆலோசனைக்குப் பிறகு, பி.ஜே.பி வேட்பாளரின் வேட்புமனுவை ஏற்றுக்கொண்ட தேர்தல் அதிகாரி, 'உங்கள் பிரச்னைகளை கோர்ட்டில் போய் வைத்துக்கொள்ளுங்கள்’ என்று சொல்லிவிட்டார்.'

''அமைச்சர்கள் தொகுதியில் என்ன செய்கிறார்கள்?'

''கிராமங்களில் உள்ள தே.மு.தி.க ஆட்களை வலைவீசி முதலில் பிடிக்கும்படி மேலிட உத்தரவாம். அடுத்து, மாற்று கட்சிக்காரர்களை குடும்பம் குடும்பமாக தங்கள் பக்கம் வளைத்து வருகிறார்கள். இதற்காக மாறுவேடத்தில் ராத்திரி வேட்டையை சந்தடியில்லாமல் ஆரம்பித்துவிட்டார்கள். செந்தில்பாலாஜி, ஆர்.பி.உதயகுமார், விஜயபாஸ்கர் ஆகியோர் இடையே ஆள்பிடிப்பதில் போட்டியாம். விஜயபாஸ்கர் தரப்பில் இதுவரை 150 தே.மு.தி.கவினரை இழுத்துவிட்டதாகச் சொல்கிறார்கள். செங்கோட்டையனுக்கு குழுமணி அருகே பிரச்னைக்குரிய ஒரு ஏரியாவை ஒதுக்கியிருக்கிறார்கள். அந்த ஏரியாவில் கடந்த எம்.பி தேர்தலில் தி.மு.க வேட்பாளர்தான் அதிக ஓட்டுகளை வாங்கினாராம். அந்த ஏரியாவில் அதிக ஓட்டுகளை வாங்க வேண்டும் என்பதற்காக செங்கோட்டையனுக்கு ஸ்பெஷல் அசைன்மென்ட் கொடுக்கப்பட்டுள்ளதாம். இதற்காக அங்கே இரண்டு வீடுகளை வாடகைக்குப் பிடித்து தன் ஆதரவாளர்களுடன் செட்டிலாகிவிட்டாராம் செங்கோட்டையன். அந்த ஏரியா பிரச்னைகளைப் பற்றி கிராம மக்களுடன் பேசியும், அதை தீர்த்து வைப்பதற்கான வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறார் செங்கோட்டையன். அந்த ஊர்மக்கள் கேட்டதெல்லாம் கிடைக்கிறதாம்!'' என்று சொல்லிவிட்டு எழுந்த கழுகார்,

''வேலூர் மாநகராட்சி துணை மேயர் தேர்தலில் அ.தி.மு.கவுக்கு கிடைக்க வேண்டிய 34 ஓட்டுகளில் 30 ஓட்டுகள் மட்டுமே கிடைத்துள்ளன. ஓட்டை மாற்றிப்போட்ட அந்த கருப்பு ஆடுகள் யார் என்பதைக் கண்டுபிடிக்க தனி டீம் அமைத்துள்ளார்கள். ரங்கம் தேர்தல் முடிந்ததும் ஆக்ஷன் இருக்குமாம்!'' என்றபடி விட்டார் ஜூட்.

படங்கள்: என்.ஜி.மணிகண்டன், தே.தீட்ஷித், நா.ராஜமுருகன்

தமுக்கத்தில் தடபுடல்!

மதுரை கிரானைட் அதிபர் பி.ஆர்.பி-யின் மைத்துனரான கான்ட்ராக்டர் தனிக்கொடியின் மகன் ராஜவேல்பாண்டியனுக்கும், ஆண்டிப்பட்டி அ.தி.மு.க ஒன்றியச் செயலாளர் லோகிராஜனின் மகள் ஹரிஷ்மாவுக்கும் கடந்த 23-ம் தேதி மதுரை தமுக்கத்தில் மிகப் பிரமாண்டமாக திருமணம் நடந்தது. தல்லாகுளத்தில் இருந்து தமுக்கம் வரை நடந்தே வந்தார் பி.ஆர்.பி. இதனால் டிராபிக் ஜாம் ஆனது. திருமணத்துக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன்கள் இருவரும் வந்திருந்தார்கள். கட்சி வேறுபாடு இல்லாமல் அ.தி.மு.க-வைச் சேர்ந்த திண்டுக்கல் சீனிவாசன், தி.மு.க மாவட்டச் செயலாளர் தேனி மூக்கையா, அழகிரியின் வலதுகரம் மன்னன் என்று எல்லா கரைகளும் தலைகாட்டிப் போனார்கள்.

தாணு ஆபீஸில் ரெய்டு...

மழைவிட்டும் தூவானம் விடாத கதையாக தமிழ் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தேர்தல் பரபரப்பு அடங்கும் முன்பே அடுத்த பரபரப்பு. தலைவர் பதவிக்கு கலைப்புலி தாணு அமர்ந்து ஒருவாரம்கூட ஆகவில்லை. அதற்குள் கடந்த 28-ம் தேதி மாலை 'தாணு வீட்டில் ஆபீஸில் ரெய்டு...’ செய்தி கோடம்பாக்கத்தில் குப்பென்று பற்றிக்கொண்டது. உண்மையில் சர்வீஸ் டாக்ஸ் சம்பந்தமாக அதிகாரிகள் தாணு ஆபீஸுக்கு வந்து விசாரித்துவிட்டு பேனதை பார்த்தவர்கள் கண், காது, மூக்கு வைத்து ரெய்டு செய்தியை கிளப்பிவிட்டு இருக்கிறார்கள்.