கார்த்தி சிதம்பரத்துக்கும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ளது. சமீபத்தில் கார்த்தி சிதம்பரம் தனது ஆதரவாளர்களை வைத்து ஜி-67 என்ற கூட்டத்தை சென்னையில் நடத்தியது குறித்து விளக்கம் கேட்டு இளங்கோவன் நோட்டீஸ் அனுப்பினார். அதில், கட்சியில் இருந்து நீக்கப்படுவீர்கள் என்று கார்த்தியை இளங்கோவன் எச்சரித்து இருந்தார். என்னை நீக்க இளங்கோவனுக்கு அதிகாரம் இல்லை என்று பதிலடி கொடுத்தார் கார்த்தி சிதம்பரம். இந்த மோதல் தொடர்ந்து கொண்டிருக்கும் சூழலில், கார்த்தி சிதம்பரத்தைச் சந்தித்தோம்.

''எதற்காக இந்த ஜி -67 கூட்டம்? இந்தக் கூட்டத்துக்கான அனுமதியை தலைமையிடம் வாங்கவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளதே?''

''காங்கிரஸ் கட்சியில் உள்ள என்னுடைய இளைய நண்பர்களை புது வருடம் மற்றும் பொங்கல் திருநாளில் சந்திப்பது வழக்கம். அப்படித்தான் இந்த ஆண்டும் சந்தித்தேன். தனிப்பட்ட முறையில் என் சொந்த செலவில் அவர்களுக்கு விருந்து வைத்தேன். அதற்கு ஏன் காங்கிரஸ் தலைமையிடம் அனுமதி வாங்கவேண்டும்?''

''காமராஜர் ஆட்சியை விமர்சித்து அடிக்கடி சர்ச்சையில் சிக்குகிறீர்களே?'

''ஒருபோதும் காமராஜரை நான் விமர்சித்தது இல்லை. முன்பு ஒரு கூட்டத்தில், 'சரித்திர சாதனைகள், தியாகங்களை வைத்து மட்டுமே மக்களைச் சந்திக்க முடியாது. எதிர்காலத் திட்டங்கள் வேண்டும்’ என்று சொன்னேன். அதற்கு காமராஜர் ஆட்சியை விமர்சனம் செய்துவிட்டார் கார்த்தி என்று சிலர் பரபரப்பை ஏற்படுத்தினார்கள். இந்தக் கூட்டத்திலும்கூட நான் எந்த இடத்திலும் காமராஜரை விமர்சனம் செய்யவில்லை.''

''காங்கிரஸின் கொள்கைகளில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டுமா?''

''நிச்சயமாக. தமிழகத்தில் 21 ஆயிரம் கோடி ரூபாய் மதுவின் மூலமாக வருகிறது. அந்த வருவாயை வைத்து ஒரு மாநிலத்தின் வளர்ச்சி இருக்கக் கூடாது. அதிலிருந்து மாறுபட வேண்டும். அதற்கான வரைவுத் திட்டம் ஒன்றை காங்கிரஸ் கட்சி கொண்டு வரவேண்டும். ஒரு புதிய பொருளாதாரக் கொள்கையை காங்கிரஸ் கட்சி கொடுக்க வேண்டும். அப்படிச் செய்தால் திராவிடக் கட்சிகளுக்கும் நமக்கும் இருக்கும் வேறுபாடுகள் மக்களுக்குத் தெளிவாகத் தெரியும்.''

''காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் என்னதான் செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?''

''கடந்த காலத்தில் காங்கிரஸ் கட்சி பல சாதனைகளை செய்திருந்தாலும் எதிர்காலத்தில் என்ன செய்யவிருக்கிறது என்பதுதான் முக்கியம். அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்பதை முன்வைத்தால்தான் மக்கள் மனதில் இடம் பிடிக்க முடியும் என்பதை தலைவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.''

''தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் செயல்பாடு திருப்திகரமாக இருக்கிறதா? கட்சி மறுசீரமைக்கப்பட வேண்டுமா?''

''ஒருவரை மட்டுமே விமர்சனம் செய்வது சரியாக இருக்காது. இது ஒரு கூட்டுப் பொறுப்பு. ஒட்டுமொத்த கட்சியும் மறுசீரமைக்கப்பட வேண்டும். பழைய சிந்தனைகள் ஒன்றுக்கும் உதவாது. தற்போது காங்கிரஸ் கட்சிக்குப் புதிய கதை, புதிய வசனம், புதிய கதாநாயகன், புதிய கதாநாயகி என அனைத்தும் அவசியம் தேவை. முதலில் ஒரு தெளிவான முதலமைச்சர் வேட்பாளரை காங்கிரஸ் கட்சி அடையாளம் காண வேண்டும். அவரை முன்னிறுத்தாமல் திராவிடக் கட்சிகளோடு போட்டிபோட முடியாது.''

''முதல்வர் வேட்பாளராக யாரை அறிவிக்க வேண்டும் என்ற கருதுகிறீர்கள்? ப.சிதம்பரத்துக்கு அந்த தகுதி இருக்கிறதா?

''அது, காங்கிரஸ் கட்சி ஒட்டுமொத்தமாக உட்கார்ந்து எடுக்கக் கூடிய முடிவு. அதில் நான் தலையிட முடியாது. அது கூட்டு முடிவாகத்தான் இருக்குமே தவிர, தனிப்பட்ட முடிவாக இருக்காது. தகுதி யாருக்கு இருக்கிறது, யாருக்கு இல்லை என்பதை காங்கிரஸ் கட்சிதான் முடிவு செய்ய வேண்டும்.''

''ஜி-67 கூட்டத்தில் பூர்ண மதுவிலக்கைப் பற்றிப் பேச குமரி ஆனந்தனுக்கு மட்டுமே தகுதி இருக்கிறது என்று கூறியிருக்கிறீர்களே? இது மற்றவர்களை குற்றம் சொல்வதாக உள்ளதே?''

''உண்மைதான். பூர்ண மதுவிலக்கை அவர் மட்டும்தான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். அதற்காக காங்கிரஸில் இருப்பவர்கள் குடிகாரர்கள் என்று சொல்லவில்லை.''

''நடிகை குஷ்பு காங்கிரஸில் இணைந்திருக்கிறாரே?''

''குஷ்பு எனக்கு நல்ல நண்பர். முற்போக்கு சிந்தனையாளரும்கூட. திரையுலகில் இருப்பவர்கள் பொதுவாழ்க்கைக்கு வரலாம். ஆனால், அவர்களை தலைவர்களாக முன்னிறுத்துவதை நான் வரவேற்கவில்லை. அரசியல் என்பது வெறும் கிளாமரால் மட்டுமே போய்விடக் கூடாது. அவர்களுக்கென ஒரு சிந்தனை வேண்டும். கொள்கை ரீதியான கருத்துகளை கொண்டவர்களாக இருக்க வேண்டும்.''

நா.இள.அறவாழி

படம்: கே.ராஜசேகரன்