பொன்விழி, அன்னூர்.

தன்னையே அர்ப்பணித்த ரமண மகரிஷி போன்றவர்கள் தோன்றிய மண்ணில் ருத்ராட்சையில் இருந்து சிம்மாசனம் வரை தங்க முலாம் பூசி வாழ்ந்து வருகிறார்களே?

கைக்குத்தல் அரிசி சமைத்துச் சாப்பிட்டால் உடலுக்கு நல்லது என்று சொல்லி ரமணரிடம் அனுமதி கேட்டார்கள். 'இங்கு சாப்பிடும் அனைவருக்கும் அப்படியே செய்ய முடியுமா?’ என்று அவர் கேட்டார். 'அப்படிச் செய்ய இயலாதே. தங்களுக்கு மட்டும்தான் அப்படிச் செய்ய முடியும்’ என்று சொன்னார்கள். வேண்டாம் என்று மறுத்துவிட்டவர் ரமணர்.

சமையல் செய்துகொண்டே ஒருமுறை சொன்னாராம்: 'தூசியைக்கூட உபயோகிக்கத் தெரிந்திருக்க வேண்டும். அதேநேரத்தில் உலகத்தையே தூசி எனத் தள்ளவும் தயாராக இருக்க வேண்டும்’ என்று சொன்னவர் மட்டுமல்ல... அப்படியே வாழ்ந்தும் காட்டியவர் ரமணர். இப்போது இருப்பவர்கள் வெறும் 'பேச்சாளர்’கள் மட்டுமே!

எம்.பாரூக், திருச்சி-8.

பிரார்த்தனைக் கூடத்துக்கு வந்த காந்தியைச் சுட்டுக் கொன்ற கோட்சேவுக்கு சிலை வைப்பது?

காந்தியை இன்னொரு முறை சுட்டுக்கொல்வதற்குச் சமம். அன்று ஒரு தனி மனிதன் கையில் இருந்த துப்பாக்கி, இன்று ஒரு கூட்டத்தின் கையில் சிக்கி இருப்பதுதான் ஆபத்தானது.

அ.குணசேகரன், புவனகிரி.

ஸ்ரீரங்கம் தேர்தலில் பலமுனைப் போட்டி ஏற்பட்டு விட்டதே... யாருக்கு லாபம்? யாருக்கு நஷ்டம்?

அ.தி.மு.க., தி.மு.க., பி.ஜே.பி., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய நான்கு முனைப் போட்டி நடக்க இருக்கிறது ஸ்ரீரங்கத்தில். பொதுவாகவே இடைத்தேர்தல்களில் ஆளும் கட்சிதான் வெற்றி பெறும். எதிர்க் கட்சிகள் அனைத்தும் சேர்ந்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்தினால் ஆளும் கட்சிக்குக் கொஞ்சம் நெருக்கடியை ஏற்படுத்தலாம். ஆனால் ஸ்ரீரங்கத்தில் அதற்கான சூழ்நிலை இல்லை. எதிர்க் கட்சிகள்தான் மூன்றாகப் பிரிந்து நிற்கின்றன. ஆளும் கட்சிக்கு எதிரான வாக்குகள் மூன்றாகப் பிரிவது ஆளும் கட்சிக்கு நல்லதுதான். மேலும், காங்கிரஸ், ம.தி.மு.க,. பா.ம.க ஆகிய கட்சிகள் போட்டியிடவும் இல்லை, யாருக்கு ஆதரவு என்று சொல்லவும் மறுத்துவிட்டன. ஓர் அரசியல் கட்சி ஒரு தேர்தலில் போட்டியிட வேண்டும் அல்லது இன்னாருக்கு ஆதரவு என்று சொல்லவாவது வேண்டும். தங்களது முடிவை எடுத்து 'அடையாளம்’ காட்டிக் கொள்ளக் கூடாது என்று இந்தக் கட்சிகள் நினைக்கிறதா எனத் தெரியவில்லை. எப்படிப் பார்த்தாலும் இத்தகைய முடிவுகள் ஒரு கட்சியின் எதிர்காலத்துக்கு நல்லதல்ல!

எஸ்.தியாகராஜன், மதுரை-2.

ஒபாமாவின் இரண்டு மகள்களுக்கும் இந்தியாவுக்கு வர அவர்கள் படிக்கும் பள்ளிக்கூடம் விடுமுறை வழங்காதது குறித்து?

அவர்கள் படிக்கும் பள்ளிக்கூடம் விடுமுறை வழங்கவில்லை என்பது உண்மையல்ல. விடுமுறை போட்டுவிட்டு அவர்கள் இருவரும் எங்கும் செல்ல விரும்பவில்லை என்றே செய்திகள் சொல்கின்றன. அது நல்ல விஷயம்தானே!

கே.ஏ.என்.சிவம், பெங்களூரு.

ஜாமீனில் உள்ள ஓர் அரசியல்வாதி தேர்தல் கூட்டங்களில் பங்கெடுத்துப் பேசலாமா?

நீதிமன்றத்தின் அனுமதி வாங்கிய பின் பேசலாம். அதைச் செய்யாததால்தான் ஓம்பிரகாஷ் செளதாலாவின் ஜாமீன் ரத்து ஆனது. அதைத் தெரிந்துகொண்டதால்தான் ஜெயலலிதா எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்காமல் இருக்கிறார். ஸ்ரீரங்கத்தில் இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. அந்த தொகுதி வாக்காளர்களுக்கு ஜெயலலிதா வேண்டுகோள் வைத்து பேசும் வீடியோ தயாராகி வருவதாகவும் அதனை அந்தத் தொகுதியில் ஒளிபரப்ப இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதற்குத் தடை இருக்காது. ஒருமுறை பேராசிரியர் சுப.வீரபாண்டியன் பேசுவதற்கு நீதிமன்றம் தடைவிதித்து இருந்தது. அவர் 'எங்கோ’ பேசியதை வீடியோவாக ஒளிபரப்பினார்கள். சிக்கல் எழவில்லை!

வி.எஸ்.ராமு, செம்பட்டி.

2016 தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க., பி.ஜே.பி கூட்டணி தயாராகிவிட்டதா?

பெங்களூரு தீர்ப்புக்குப் பிறகுதான் எல்லாக் கூட்டணியும். அதுவரை அமைதி! அமைதி!

எஸ்.பூவேந்த அரசு, சின்னதாராபுரம்.

நாடாளுபவர்கள் இப்போதெல்லாம் மாறு வேடத்தில் நகர்வலம் வந்து, நாட்டு மக்களின் உண்மை நிலைமை அறிய முற்படுவதில்லையே. ஏன்?

நாடாளுபவர்கள் 'மாறுவேடத்தில்’ தானே வலம் வருகிறார்கள்? உண்மை நிலை அறிகிறார்களா என்பதுதான் சந்தேகம்?!

செ.அ.ஷாதலி, கோனுழாம்பள்ளம்.

அரசியல்வாதிகளிடம் என்ன பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்?

எப்படி அவமானப்படக் கூடாது என்பதை!

தாமஸ் மனோகரன், புதுச்சேரி-4.

'தமிழகத்தில் நூலகங்கள் சரிவர இயங்கவில்லை...’ என்கிறாரே ஸ்டாலின். உண்மையா?

உண்மைதான்! நூலகத்துக்கான பணியாளர் இடங்கள் தமிழகம் முழுவதும் 50 சதவிகிதம் காலியாக உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்துக்கும் மாவட்ட நூலக அலுவலர் என்று ஒருவர் இருக்க வேண்டும். 17 மாவட்டங்களில் அப்படி ஒருவர் இல்லை. வேறு துறையைச் சேர்ந்தவரை கூடுதலாகப் பார்க்கச் சொல்லி இருப்பார்கள். கன்னிமாரா நூலகத்தை எடுத்துக்கொண்டால் அங்கு 112 பணியாளர்கள் இருக்க வேண்டும். ஆனால் 46 பேர்தான் இருக்கிறார்கள். இதைப் பற்றிய அக்கறையே நூலகத் துறைக்கு இல்லை. ஏனென்றால், நூலகத் துறையின் இயக்குநர், துணை இயக்குநர் பதவிக்கு நூலகத் துறையைச் சேர்ந்தவரை நியமிக்காமல் பள்ளிக் கல்வித் துறையைச் சேர்ந்தவரையே கடந்த 30 ஆண்டுகளாக நியமித்து வருகிறார்கள். வருபவர்கள், அங்கிருந்து ஓடத்தான் விரும்புவார்களே தவிர, இங்கு இருந்து நூலகங்களை வளப்படுத்த எப்படி நினைப்பார்கள்?

அண்ணா நூற்றாண்டு விழா நூலகம் பற்றிச் சொல்லவே வேண்டியது இல்லை. பூட்டவில்லையே தவிர, பூட்டுவதற்கும் இப்போது இருப்பதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. பெருமாள் முருகனின் 'மாதொரு பாகன்’ புத்தகத்துக்காகக் குரல் கொடுக்கும் எழுத்தாளர்கள் இந்த மாபெரும் பாவத்துக்கு எதிராகவும் முழங்க வேண்டும்!

ரேவதிப்ரியன், ஈரோடு-1.

சாதுக்களுக்கும் பத்மபூஷணா?

இன்னும் அவர்கள் பட்டங்களைத் துறக்கவில்லைபோலும்!

நிஜந்தன், சீர்காழி.

ராஜபக்ஷேவின் தேர்தல் தோல்வி, சுப்பிரமணியன் சுவாமிக்கு பின்னடைவுதானே?

எல்லாவற்றுக்கும் ட்விட்டரில் கருத்துச் சொல்லும் சுவாமி இது பற்றி கருத்துச் சொல்லாமல் இருப்பதில் இருந்தே தெரியவில்லையா?

சுந்தரிப்ரியன், வேதாரண்யம்.

மதுரையைச் சுற்றி நடந்து வரும் சகாயத்தின் அதிரடி நடவடிக்கைகளுக்கு பயன் கிடைக்குமா?

அது நீதிமன்றத்தின் தீர்ப்பைப் பொறுத்தது. இயற்கை வளம் எப்படி எல்லாம் சூறையாடப்பட்டது என்பதை சகாயம் தனது அறிக்கையில் கொடுப்பார். அதில் இருந்து மேல் நடவடிக்கைக்கு உத்தரவிட வேண்டியது சென்னை உயர் நீதிமன்றம்தான். அவர்கள் அந்த அறிக்கையை வைத்து என்ன வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கிறார்களோ அதில் இருந்துதான் சகாயத்தின் உழைப்புக்கு பயன் இருக்க முடியும். மற்றபடி வெறும் அறிக்கைகளை வைத்து ஒன்றும் செய்ய முடியாது!

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி:

கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002 kalugu@vikatan.com என்ற முகவரியிலும் அனுப்பலாம்!