Published:Updated:

சிவகாசி விபத்து: தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்!

Vikatan Correspondent
சிவகாசி விபத்து: தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்!
சிவகாசி விபத்து: தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்!
சிவகாசி விபத்து: தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்!

சென்னை: 39 பேரை பலிகொண்ட சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக 4  வார காலத்திற்குள் அறிக்கை அனுப்புமாறு தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை  ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பட்டாசு ஆலை விபத்து தொடர்பாக தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த அனுப் குமார்  ஸ்ரீவத்சவா என்பவரும், மனித உரிமை ஆர்வலர் பி.எச். பன்சால் ஆகியோர் அனுப்பிய  புகார்களின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்துள்ள தேசிய மனித உரிமை ஆணையம்,

##~~##
இது தொடர்பாக தமிழக அரசின் தலைமை செயலருக்கு மேற்கூறிய நோட்டீசை  அனுப்பியுள்ளது.
நாட்டின்   90 சதவீத பட்டாசு தயாரிப்பு சிவகாசியில் மேற்கொள்ளப்படும் நிலையில்,  அங்கு போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதிபடுத்த தமிழக அரசு  தவறிவிட்டதாக,புகார்தாரர்கள் தங்களது மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.