Published:Updated:

ஒடிசா வன்முறை: காங். தலைவர் டைட்லர் மீது கொலை முயற்சி வழக்கு!

Vikatan Correspondent
ஒடிசா வன்முறை: காங். தலைவர் டைட்லர் மீது கொலை முயற்சி  வழக்கு!
ஒடிசா வன்முறை: காங். தலைவர் டைட்லர் மீது கொலை முயற்சி வழக்கு!
ஒடிசா வன்முறை: காங். தலைவர் டைட்லர் மீது கொலை முயற்சி  வழக்கு!

புவனேஸ்வர்: ஒடிசா சட்டசபை வளாகத்தில் நடைபெற்ற வன்முறை  தொடர்பாக, காங்கிரஸ் தலைவர் ஜெகதீஷ் டைட்லர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு தொடர்பாக, முதல்வர் நவீன் பட்நாயக்கின் கருத்திற்கு எதிர்ப்பு  தெரிவித்து, அவர் பதவியிலிருந்து விலக வேண்டும் என வலியுறுத்தி,கடந்த  வியாழக்கிழமையன்று ஒடிசா சட்ட்சபை வளாகம் அருகே காங்கிரசார் ஆர்ப்பாட்டம்  நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கடும் வன்முறை வெடித்தது. இதில் பொதுமக்கள் உட்பட பலர்  படுகாயமடைந்தனர்.மேலும் போலீசாருடனும் காங்கிரஸார் மோதினர்.இச்சம்பவத்தின்போது பெண் காவல்ர் ஒருவரிடம் வன்முறை கும்பல் தவறாக  நடந்துகொண்டது.இச்சம்பவத்திற்கு கடும் கண்டனம் எழுந்தது.இதனைத் தொடர்ந்து  நடந்த சம்பவத்திற்காக ஜெகதீஷ் டைட்லர் மன்னிப்புக் கோரியிருந்தார்.

##~~##
இந்நிலையில், மேற்கூறிய வன்முறை தொடர்பாக ஒடிசா காங்கிரஸ் கட்சி தலைவர்  நிரஞ்சன் பட்நாயக், ஜெகதீஷ் டைட்லர் உள்ளிட்ட 7 காங்கிரஸ் தலைவர்கள் மீது கொலை முயற்சி, வன்முறையை தூண்டியது மற்றும் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார்  வழக்கு பதிவு செய்துள்ளனர்.