Published:Updated:

சென்னை வந்தார் பிரணாப்; முதல்வர் வரவேற்பு!

Vikatan Correspondent
சென்னை வந்தார் பிரணாப்; முதல்வர் வரவேற்பு!
சென்னை வந்தார் பிரணாப்; முதல்வர் வரவேற்பு!
சென்னை வந்தார் பிரணாப்; முதல்வர் வரவேற்பு!

சென்னை:  சென்னை உயர் நீதிமன்ற 150வது பொன்விழா நிகழ்ச்சி மற்றும் தனியார்  நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று தனி  விமானத்தில் சென்னை வந்தார்.

ஜனாதிபதியாக பதவியேற்றபிறகு முதல்முறையாக சென்னை வந்த பிரணாப்புக்கு  சென்னை விமானநிலையத்தில் முப்படையினரின் அணிவகுப்பு மரியாதை  வழங்கப்‌பட்டது.

விமான நிலையத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா  மற்றும்  அமைச்சர்கள் வரவேற்றனர்.

##~~##
விமான நிலையத்திலிருந்து  ஆளுநர் மாளிகைக்கு சென்ற அவருக்கு கவர்னர் ர‌ோசையா,  மதிய விருந்தளித்தார்.பின் சிறிது ஓய்விற்கு பின, நீதிபதிகளுடன் கலந்துரையாடலில்  ஈடுபட்டார்.
பின்னர் அவர் சென்னை உயர் நீதிமன்ற பொன்விழா நிறைவு கொண்டாட்டத்தில்  பங்கேற்க புறப்பட்டுச் சென்றார்.