Published:Updated:

கடல் வழியாக ஊடுருவ பயங்கரவாதிகள் முயற்சி: பிரதமர் எச்சரிக்கை

Vikatan Correspondent
கடல் வழியாக ஊடுருவ பயங்கரவாதிகள் முயற்சி: பிரதமர் எச்சரிக்கை
கடல் வழியாக ஊடுருவ பயங்கரவாதிகள் முயற்சி: பிரதமர் எச்சரிக்கை
கடல் வழியாக ஊடுருவ பயங்கரவாதிகள் முயற்சி: பிரதமர் எச்சரிக்கை

புதுடெல்லி:  பயங்கரவாத குழுக்கள் கடல் மார்க்கமாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயற்சிக்கலாம் என்று பிரதமர் மன்மோகன் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

டெல்லியில் இன்று மாநில போலீஸ் டிஜிபி-க்கள், மத்திய துணை ராணுவ படையினர் மற்றும் புலனாய்வு ஏஜென்சிகளின் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்ட உள்நாட்டு பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு பேசுகையிலேயே மேற்கண்ட எச்சரிக்கையை மன்மோகன் விடுத்தார்.

##~~##
பயங்கரவாத குழுக்கள், இந்தியாவில் தாக்குதல் ந‌டத்தும் பொருட்டு, கடல்வழியை‌யே அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், இந்திய-பாகிஸ்தான் எல்லைக்கோடு மற்றும் சர்வதேச எல்லைப்பகுதிகளில், பயங்கரவாதிகள் ஊடுருவல் முயற்சிகள் சமீபகாலமாக அதிகரித்துள்ளது கவலையளிக்கிறது.
சைஃபர் குற்றங்களை தவிர்க்கும் பொருட்டு,மத்திய அரசு பல முனனெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.அதன் ஒருகட்டமாக, புதிய சைஃபர் பாதுகாப்பு கட்டமைப்பு உருவாக்கும் செயல்களில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது என்று  அவர் மேலும் கூறினார்.