Published:Updated:

ராணுவத்தை என்னிடம் கொடுத்தால் ஒரே மாதத்தில் நாட்டை சீராக்குவேன்: பால் தாக்கரே

Vikatan Correspondent

மும்பை: "இந்திய ராணுவத்தை என்னிடம் ஒப்படையுங்கள்...ஒரே மாதத்தில்  இந்தியாவில் உள்ள அனைத்து பிரச்னைகளையும் சரி செய்து, இந்தியாவையே  சீராக்குகிறேன் ”என்று சிவசேனாத் தலைவர் பால் தாக்கரே கூறியுள்ளார்.

சிவசேனாவின் கட்சி பத்திரிகையான 'சாம்னா'வுக்கு அளித்துள்ள பேட்டியில் இதனைக்  கூறியுள்ள அவர்,இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் ஏற்படும் தாக்குதல்களை  தம்மால் பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் ஆவேசமாக குறிப்பிட்டுள்ளார்.

##~~##
சிவசேனா கட்சியே ராணுவம் போன்றதுதான்.ஆனால் எங்களிடம் வெறும் தோரணங்கள்,  பேனர்கள், டிரம்ஸ் போன்ற ஆயுதங்கள்தான் உள்ளன.எங்களுக்கு எவ்வளவோ  செல்வாக்கு உள்ளது.ஆனால் நாட்டை சீராக்க அதுமட்டும் போதாது.ராணுவ அதிகாரத்தை  என்னிடம் கொடுத்தால் ஒரு அற்புதத்தை நான் நிகழ்த்திக் காட்டுவேன் என்று அந்த  பேட்டியில் மேலும் கூறியுள்ளார் பால்தாக்கரே.