Published:Updated:

"நான் எப்பவுமே தி.மு.க தான்!”

அழகிரியின் வெள்ளைப் புறா தூது

ண்ணனுக்கு எந்த  மகு​டங்களும் இல்லை  என்​றாலும் தம்பிகள் கொண்​டாட்டத்தைக் குறைவில்லாமல் நடத்தி முடித்து​விட்டார்கள். அழகிரியின் பிறந்த​நாளான ஜனவரி 30-ம் தேதி வழக்கம் போல மதுரை குலுங்கியது.

"நான் எப்பவுமே தி.மு.க தான்!”

மு.க.அழகிரிக்கு இது 64-வது பிறந்தநாள். தி.மு.கவில் இருக்கும்போது தன்னுடைய பிறந்தநாள் எப்படி விமரிசையாகக் கொண்டாட வேண்டும் என்று அழகிரி விரும்பினாரோ, அப்படியே இப்போதும் கொண்டாட்டங்கள் இருக்க வேண்டும் என்று விரும்பினார். முன்பெல்லாம் அதுவாக நடக்கும். இப்போது நடத்திக் காட்ட வேண்டிய நெருக்கடி அழகிரிக்கு இருந்தது. முன்பு  வி.ஐ.பிகள் மாலையுடன் அணி​வகுப்பார்கள். இப்போது அவர்கள் இல்லை. ஆனாலும் அவரது ஆதரவாளர்கள் கும்பல் கும்பலாக வந்து குதூகலம் கூட்டினார்கள்.

"நான் எப்பவுமே தி.மு.க தான்!”

அழகிரியின் வீடு இருப்பது சத்திய சாய் நகரில். முந்தின நாள் இரவே போஸ்டர்கள், கட் அவுட்டுகள் வைக்க தொண்டர்கள் குவிந்தார்கள். முந்தின நாள் மாலையில் தனது வீட்டை நோக்கி வந்தவர்களிடம் அழகிரி சாதாரணமாய் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார். மறுநாள் காலை தி.மு.க கரை வேட்டியுடன் பளிச்சென வந்தார் அழகிரி.

"நான் எப்பவுமே தி.மு.க தான்!”

கடந்த ஆண்டு பட்டு வேட்டி, வெள்ளை சட்டை அணிந்துகொண்டு அனைவர் முன்னும் வந்தார் அழகிரி. கேக் வெட்டி விட்டு, ராஜா முத்தையா மண்டபத்தில் நடக்கும் விழாவுக்கு காரில் ஊர்வலமாகச் சென்றார். இந்த ஆண்டு தி.மு.க கரை வேட்டியுடன் வலம் வந்ததோடு இல்லாமல், சில இடங்களில் தி.மு.க கொடியை தூக்கிப் பிடித்துக் காட்டினார். அழகிரியின் வீட்டில் இருந்து மண்டபம் வரை 58 இடங்களில் அழகிரிக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது. சில இடங்களில் குதிரை, யானை வைத்து வரவேற்பு கொடுக்கப்பட்டது. எந்த ஆண்டும் இல்லாமல் இந்த ஆண்டு கோரிப்பாளையத்தில் வைத்து வெள்ளைப் புறாக்களை வானத்தை நோக்கிப் பறக்கவிட்டார் அழகிரி. 'மீண்டும் தி.மு.கவில் இணைவதற்கு சமாதானமாக வெள்ளைப் புறாவைப் பறக்கவிடுகிறாரா?’ என்று கமென்ட் அடித்தது ஒரு கரை வேட்டி.

"நான் எப்பவுமே தி.மு.க தான்!”

மண்டபத்தில் கேக் வெட்டும் வைபோகம் நடந்தது. இதுநாள் வரை கேக் ஸ்பான்சர் செய்த கதிரவன் பேக்கரி சின்னம்மாள் இப்போது தி.மு.கவில் இருப்பதால் வேறு ஒருவர் கேக் எடுத்து வந்திருந்தார். ராஜ்ய சபா எம்.பியான கே.பி.ராமலிங்கம் வந்தார். அழகிரியைத் தழுவி வாழ்த்துகளை சொல்லிவிட்டு இறுதிவரை அழகிரியுடன் இருந்தார். அழகிரியின் பிறந்தநாளுக்கு முதல்நாள்தான் ராமலிங்கத்துக்கு மாநில விவசாய அணிச் செயலாளர் பதவியை தி.மு.க வழங்கியது. ஆனாலும் அசராமல் பழைய நட்பில் வந்து வாழ்த்தினார் ராமலிங்கம். அவரோடு  தி.மு.கவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன், மாலைராஜா போன்றோர் வந்திருந்தனர். செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அதிரடியாக பதில் தரும் அழகிரி இந்த ஆண்டு செய்தி அறிக்கையை மட்டும் தந்துவிட்டு வீண் சிக்கல்களில் மாட்டாமல் தப்பித்துப் போய்விட்டார்.  

எப்போதும் அழகிரியின் பிறந்தநாள் ஊர்வலத்தில் ட்ராஃபிக்கை நிறுத்தி வழி மாற்றி விடுவது இல்லை. இந்த ஆண்டு ஒரு மணி நேரத்துக்கு மேலாக மக்களை காக்கப்போட்டு வழிகளை மாற்றிவிட்டனர் மதுரை மாநகர் காவல் துறையினர். வழி நெடுகிலும் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன.

கல்லூரி மாணவர்கள் நிறைய பேர் இருந்தனர். அவர்களில் சிலர் நடு ரோடுகளில் பைக் சாகசம் செய்தார்கள். கடுப்பான காவல் துறை அவர்கள் எல்லோரையும் வீடியோ எடுத்தது. அவர்கள் மீது பல்வேறு வழக்குகளைப் போட்டதோடு அடுத்த ஆண்டு அழகிரியின் பிறந்தநாள் ஊர்வலத்துக்குத் தடை போடும் திட்டத்தை வைத்துள்ளதாம் மதுரை காவல் துறை!

"நான் எப்பவுமே தி.மு.க தான்!”

''அண்ணன் பேசணும்னு நினைச்சுட்​டாருன்னா படீர்னு பேசிடுவார். அவருக்கு மறைச்சு ஒளிச்சு எல்லாம் பேசத் தெரியாது. உண்மையைக் கொட்டிடுவார். ஆனால், பேசக் கூடாதுன்னு நெனைச்சா ஒரு வார்த்தைகூட பேச மாட்டார்'' இப்படித்தான் அழகிரியின் அனுதாபிகள் நம்மிடம் சொன்னார்கள். இந்தப் பிறந்தநாள் விழாவில் எதையும் பேசவில்லை அழகிரி.

விழாவில் தி.மு.கவின் கொள்கை பாடல்​களும் அழகிரியின் துதிப்பாடல்களும் இசைக்கப்பட்டன. வைக்கப்பட்டிருந்த அனைத்து வாழ்த்து பேனர்களிலும் ஸ்டாலினை மட்டம் தட்டுவதுபோலவும் 'அழகிரி இல்லாவிட்டால் தி.மு.க இல்லை’ என்பதுபோலவும் வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. குடைவீடு அருண்குமார் என்பவர் அழகிரியின் சிலை ஒன்றைசெய்து அதற்கு திருக்குடை பிடித்துக்கொண்டு வந்தார்.

இந்த விழாவில் அவர் சொல்லாமல் சொன்னது 'நான் என்றும் தி.மு.கவில்தான் இருப்பேன்’ என்பதுதான்!

படங்கள்: பா.காளிமுத்து, ஈ.ஜெ.நந்தகுமார்,   மீ.நிவேதன், சே.சின்னதுரை

அடுத்த கட்டுரைக்கு