Published:Updated:

ராஜபக்சே வருகைக்கு பா.ஜ.வினரே பொறுப்பேற்க வேண்டும்:ஜி.கே. வாசன்

ராஜபக்சே வருகைக்கு பா.ஜ.வினரே பொறுப்பேற்க வேண்டும்:ஜி.கே. வாசன்
ராஜபக்சே வருகைக்கு பா.ஜ.வினரே பொறுப்பேற்க வேண்டும்:ஜி.கே. வாசன்
ராஜபக்சே வருகைக்கு பா.ஜ.வினரே பொறுப்பேற்க வேண்டும்:ஜி.கே. வாசன்

சென்னை: இலங்கை அதிபர் ராஜபக்சேவின் இந்திய வருகைக்கு பா.ஜனதாவினரே பொறுப்பேற்க வேண்டுமென மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே. வாசன் கூறியுள்ளார்.

தென்னிந்திய தொழில் வர்த்தக சபை கூட்டமைப்பு மற்றும் சென்னை சுங்க இல்ல முகவர்கள் சங்கம் ஆகியவற்றின் சார்பில் தென்மண்டல கடல் வாணிகச் சந்திப்பு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.இதில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டு விழா சிறப்பு மலரை வெளியிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வாசன்,நாடாளுமன்றம் 12 நாட்களாக முடங்கியதற்கும்,இலங்கை அதிபர் ராஜபக்சேவை இந்தியாவிற்கு அழைத்ததற்கும் பா.ஜனதாவினரே பொறுப்பேற்க வேண்டும்.

##~~##
இலங்கை ராணுவத்தினருக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கக் கூடாது என தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஞானதேசிகன்,காங்கிரஸ் எம்.பி.கள் பாதுகாப்புத் துறை அமைச்சர் அந்தோனியைச் சந்தித்துப் பேசியுள்ளனர். நானும் விரைவில் அவருடன் பேசவிருக்கிறேன்.அதே நேரம் தமிழகத்திற்கு வரும் இலங்கை சுற்றுலாப் பயணிகள் விஷயத்தில் அரசியல் கலப்பு கூடாது.
நமது அரசியல் உணர்வு இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு மறுவாழ்வுக்கு உதவிகரமாக இருக்க வேண்டும். நமது அரசியல் உணர்வுகள் எந்த விதத்திலும் இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி விடக்கூடாது"என்றார்.