Published:Updated:

மத்திய அமைச்சர்களின் சொத்து மதிப்பு பல மடங்கு உயர்வு

Vikatan Correspondent
 மத்திய அமைச்சர்களின் சொத்து மதிப்பு பல மடங்கு உயர்வு
மத்திய அமைச்சர்களின் சொத்து மதிப்பு பல மடங்கு உயர்வு
 மத்திய அமைச்சர்களின் சொத்து மதிப்பு பல மடங்கு உயர்வு

புதுடெல்லி: பிரதமர் மன்மோகன் சிங் உள்பட மத்திய அமைச்சர்களின் சொத்து பல மடங்கு உயர்ந்துள்ளது. பிரதமர் தனக்கு ரூ. 10.73 கோடி சொத்து இருப்பதாக தான் தாக்கல் செய்துள்ள சொத்து விவர ஆவணத்தில் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் அவருடைய சொத்து மதிப்பு இந்த ஆண்டு இரட்டிப்பாகியுள்ளது. இதேபோல், பிரதமரைவிட அவரது அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளவர்களின் சொத்து மதிப்பும் பல மடங்கு உயர்ந்துள்ளது.

பிரதமர் மன்மோகன் சிங்: இவருக்கு ரூ. 7.27 கோடி மதிப்பில் டெல்லி, சண்டீகரில் தலா ஒரு குடியிருப்பு, வங்கிகளில் உள்ள வைப்பு நிதி மற்றும் பங்குகள் முதலீட்டின் மதிப்பு ரூ. 3.46 கோடி, சொந்தமாக மாருதி-800 கார் உள்ளது.

2011-12-ம் நிதியாண்டில் கூடுதல் வருமானம் பிரதமருக்கு இல்லை. இருந்தபோதும் அவரது சொத்து மதிப்பு, கடந்த ஆண்டுடன் ஒப்புடும்போது ரூ. 10,73,88,730.81 கோடி என இந்த ஆண்டு இரட்டிப்பாகி உள்ளது என மதிப்பிடப்பட்டுள்ளது.

பிரதமரின் பழைய மாருதி காரின் தேய்மானம் போக அதன் விலை ரூ. 21,033 என மதிப்பிடப்பட்டுள்ளது. இவை தவிர தனக்கு 150.80 கிராம் தங்கம் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள பிரதமர் அதன் மதிப்பைத் தெரிவிக்கவில்லை.

சரத் பவார் (வேளாண் துறை): இவருக்கு அசையா சொத்து ரூ. 7,86,77,802 கோடி, மனைவி பெயரில் ரூ. 4,76,33,586 கோடி மதிப்பிலும் உள்ளது. அசையும் சொத்துகள் சரத் பவாருக்கு ரூ. 3,89,96,000 மதிப்பிலும் அவரது மனைவிக்கு ரூ. 1,08,54,686 கோடி மதிப்பிலும் உள்ளது. பிரிக்கப்படாத ஹிந்து குடும்ப சொத்துகள் என ரூ. 3,58,94,117 கோடி மதிப்பில் உள்ளது. சரத் பவாரின் இதர வங்கி வைப்புகள், பங்கு முதலீடுகள் உள்பட அவர் வைத்துள்ள சொத்து மதிப்பு ரூ. 22 கோடி ஆகும்.

கபில் சிபல் (மனித வள மேம்பாடு): இவருக்கு ரூ. 37.22 கோடி மதிப்பில் சொத்து உள்ளது. புதுடெல்லி, பாட்னா, சண்டீகர், செகந்தராபாத், குர்கான் ஆகிய நகரங்களில் ஐந்து வீடுகள், லூதியானா, சண்டிகரில் வர்த்தகக் கட்டடங்கள், ஃபரீதாபாத், குர்கானில் காலி மனைகள், பெங்களூர் ஏலஹங்கா, ஹரியாணா குர்கானில் விவசாய நிலங்கள் உள்ளன. நான்கு கார்கள், ஒரு மோட்டார் சைக்கிள் உள்ளது. இவை அனைத்தும் உள்ளிட்ட கபில் சிபலின் சொத்து மதிப்பு ரூ. 37.22 கோடி. அவரது மனைவி பிரமீளாவின் சொத்து மதிப்பு ரூ. 8.11 கோடி ஆகும்.

##~~##
சுஷில்குமார் ஷிண்டே (உள்துறை):
இவருக்கு ரூ. 50 லட்சம் மதிப்பில் இரண்டு வீடுகள், சுமார் ரூ. 3 கோடி மதிப்பில் இரண்டு ஃபிளாட்டுகள், ரூ. 19.76 லட்சம் மதிப்பிலான விவசாய நிலங்கள், ரூ. 1.11 கோடி மதிப்பில் விருந்தினர் இல்லம், ஒரு டிராக்டர் உள்ளது. இவரது மனைவி உஜ்வலா ஷிண்டேவுக்கு ரூ. 2.15 கோடி மதிப்பில் ஒரு ஃபிளாட், ரூ. 16.22 கோடி மதிப்பில் இரண்டு காலி மனைகள் உள்ளது.
எஸ்.எம். கிருஷ்ணா (வெளியுறவுத் துறை): இவருக்கு அசையும் சொத்துகள் ரூ. 1.89 கோடி மதிப்பிலும் அசையா சொத்துகள் ரூ. 31.44 லட்சம் மதிப்பிலும் உள்ளது. பெங்களூரில் ஒரு வீடு, மண்டியா மாவட்டத்தில் விவசாய நிலம், சோமண்ணஹள்ளியில் பண்ணை வீடு உள்ளன.
குறைந்த சொத்து வைத்திருக்கும் அமைச்சர்: பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் மிகவும் குறைந்த சொத்து வைத்துள்ளவர் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனி. இவரது மொத்த சொத்து மதிப்பு ரூ. 55 லட்சம் ஆகும்.
தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் சொத்து விவரம்
ப. சிதம்பரம்: ரூ. 11,96,01,906, மு.க. அழகிரி: ரூ. 9,50,00,000, ஜி.கே. வாசன்: தகவல் இல்லை, ஜெயந்தி நடராஜன்: ரூ. 21,69,08,506


பழனி மாணிக்கம்: ரூ. 38,87,586, எஸ். நெப்போலியன்: ரூ. 6,48,92,473, காந்தி செல்வன்: ரூ. 12,33,524, எஸ். ஜெகத்ரட்சகன்: ரூ. 2,42,51,873