Published:Updated:

தமிழகத்திற்கு தண்ணீர் தர கர்நாடகம் சம்மதம்!

Vikatan Correspondent
தமிழகத்திற்கு தண்ணீர் தர கர்நாடகம் சம்மதம்!
தமிழகத்திற்கு தண்ணீர் தர கர்நாடகம் சம்மதம்!
தமிழகத்திற்கு தண்ணீர் தர கர்நாடகம் சம்மதம்!

புதுடெல்லி:  தமிழகத்திற்கு வரும் 19-ம் தேதி வரை தினமும் 10,000 கனஅடி வீதம் காவிரி ஆற்றில் இருந்து தண்ணீர்  தர கர்நாடகம்  சம்மதித்துள்ளது.

அதில்,"சம்பா சாகுபடிக்கு உடனடியாக தண்ணீர் தேவைப்படுகிறது.எனவே கர்நாடக அரசு  காவிரியில் தினமும் 2 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட நீதிமன்றம்    உத்தரவிடவேண்டும்” எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜெயின், மதன் பி. லோகூர் ஆகியோர்   முன்னிலையில் கடந்த 7 ம் தேதியன்று விசாரணைக்கு வந்தது.
 
அப்போது தமிழ்நாடு மற்றும் கர்நாடக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் கடுமையாக   வாதிட்டனர்.கர்நாடக அரசு சார்பில் வாதிட்ட வழக்கறிஞர்,தமிழகத்திற்கு 1 டிஎம்சி   தண்ணீர் திறந்துவிட்டாலே, கர்நாடகாவில் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர்கள்   கருகிவிடும் என்றும்,எனவே தண்ணீர் திறந்துவிட முடியாது என்றும் கூறினார்.
 

##~~##
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், காவிரியில் பிவிலிகுண்டு வரை   தமிழ்நாட்டுக்கு கார்நாடக அரசு திறந்து விட்ட தண்ணீர் எவ்வளவு என்பதற்கான   விளக்கத்தை வருகிற 10 ம் தேதிக்குள் ( இன்று) அளிக்க வேண்டும் என்று  உத்தரவிட்டனர்.
இன்று இந்த வழக்கு விசாரணையின் போது கர்நாடக அரசு பதில் மனுவை தாக்கல் செய்தது. மனுவில், தமிழகத்திற்கு தினமும் 10,000 கனஅடி வீதம் வரும் 19-ம் தேதி வரை தண்ணீர் திறந்துவிட  கர்நாடகம்  சம்மதித்துள்ளது.
.