Published:Updated:

கூடங்குளம்: ஜெ. அவசர ஆலோசனை!

Vikatan Correspondent
கூடங்குளம்: ஜெ. அவசர ஆலோசனை!
கூடங்குளம்: ஜெ. அவசர ஆலோசனை!
கூடங்குளம்: ஜெ. அவசர ஆலோசனை!

சென்னை:கூடங்குளம் அணு உலைக்கு எதிரான  போராட்டக்காரர்களுக்கும்,போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து,  அங்கு காணப்படும் நிலைமை குறித்து முதலமைச்சர் ஜெயலலிதா, மாநில போலீஸ் டிஜிபி  ராமானுஜம் உள்ளிட்ட அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட சில அமைச்சர்களும்  பங்கேற்றனர்.

அப்போது, கூடங்குளம் நடந்த சம்பவம் குறித்து டிஜிபியிடம் முதல்வர் கேட்டறிந்ததாக தெர்கிறது.

மேலும் போராட்டக்காரர்கள் மீதான நடவடிக்கையின்போது, பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படா வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியதாகவும்  தெரிகிறது.

4 போலீசார் சிறைபிடிப்பு

இதனிடையே திருச்செந்தூர் அருகே உள்ள பெரிய தாழையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்கச் சென்ற 4 போலீசாரை போராட்டக்காரர்கள் சிறைபிடிக்கப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கணேசன், அன்புக்கரசி என்ற இரு சப் இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 4 போலீசாரை போராட்டக்காரர்கள் சிறை பிடித்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே சிறை பிடிக்கப்பட்ட ‌போலீசார் விடுவிக்கப்பட்டு விட்டதாக போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கூடங்குளம் வன்முறை சம்பவம் தொடர்ந்து கடற்கரை மாவட்டங்களான தூத்துக்குடி , கன்னியாகுமரியிலும் போராட்டம் பரவியுள்ளதால்,கடலோர பகுதிகளில் ‌தொடர் பதட்டம் காணப்படுகிறது.

தூத்துக்குடியில் ரயில் மறியல்

இதனிடையே கூடங்குளத்தில் நடந்த வன்முறை சம்பவங்களை ‌தொடர்ந்து தூத்துக்குடியிலும் பதட்டம் நிலவுகிறது. தூத்துக்குடியில் இன்று ரயில் நிலையத்திற்கு வந்த ‌போராட்டக்காரர்களின் ஆதரவாளர்கள், மைசூர்-தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரயிலை மறிக்க முயன்றனர்.

மேலும் மாவட்டத்தின் சில இடங்களில் கடையடைப்பும், மீனவர்களின் கிராமப்பகுதிகளில் பதட்டமும் நிலவுகிறது. ஒரு தபால் அலுவலகமும் சேதப்படுத்தப்பட்டது.

டாஸ்மாக் மூடல்

இதனிடையே கூடங்குளம் போராட்டம் காரணமாக ஏற்பட்டுள்ள பதட்ட நிலையை  தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளை இன்றும்,நாளையும் மூட  மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

##~~##
இடிந்தகரை கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடை ஒன்றுக்கு மர்ம கும்பல் தீ வைத்ததை  தொடர்ந்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிகிறது.