Published:Updated:

ஜெயலலிதா மவுனம் கலைக்க வேண்டும்: உதயகுமார்

Vikatan Correspondent
ஜெயலலிதா மவுனம் கலைக்க வேண்டும்: உதயகுமார்
ஜெயலலிதா மவுனம் கலைக்க வேண்டும்: உதயகுமார்
ஜெயலலிதா மவுனம் கலைக்க வேண்டும்: உதயகுமார்

நெல்லை: கூடங்குளம் அணு உலை தொடர்பான பிரச்னையில் முதல்வர் ஜெயலலிதா,   தனது மௌனத்தைக் கலைக்க வேண்டும் என்று போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,"காவல்துறையினருடன்  மோதலை தவிர்க்கவே நாங்கள் கடற்கரையோரப் பகுதியில் தங்கியிருந்தோம். ஆனால்,  கடந்த இரண்டு நாட்களாக அறவழியில் போராடி வந்த எங்கள் மீது காவல்துறையினர் எந்த முன்னறிவிப்பும் இன்றி தடியடி நடத்தினர்.

போராட்டக் குழு மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு காவல்துறையே முழுப் பொறுப்பு.  எங்கள் உயிருக்காகவும், வருங்கால சந்ததியினருக்காகவும் நாங்கள் இங்கே போராடி  வருகிறோம்.எங்களது போராட்டம் தொடரும்.

கூடங்குளம் அணு உலை தொடர்பான பிரச்னையில் முதல்வர் ஜெயலலிதா தற்போது  வரை மௌனம் சாதித்து வருகிறார்.அவர் தனது மௌனத்தைக் கலைக்க வேண்டும்”  என்றார்.

உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு: பிரசாந்த் பூஷன்

##~~##
இதனிடையே கூடங்குளம் அணு உலை தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றம் அளித்த  தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றம் செல்ல உள்ளதாக அன்னா ஹசாரே குழுவில்  இடம்பெற்றுள்ள மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்த அவர்,கூடங்குளத்தில்  போராட்டக்காரர்கள் மீதான தடியடி கண்டனத்துக்குரியது என்றும், மத்திய, மாநில  அரசுகளின் சகிப்புத்தன்மையற்ற நிலையையே இது காட்டுகிறது என்றும் கூறினார்.