Published:Updated:

நாணய மசோதா திருத்தத்துக்கு அமைச்சரவை ஒப்புதல்

நாணய மசோதா திருத்தத்துக்கு அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி, பிப்ரவரி 10, 2011

மக்களவையில் நிலுவையில் இருக்கும் நாணய மசோதா 2009-ல் தேவையான திருத்தங்களை மத்திய நிதியமைச்சகம் செய்வதற்கு அமைச்சரவைக் குழு இன்று ஒப்புதல் அளித்தது. இந்த மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. ##~~##

கடந்த 2009 ஜூலையில் நடைபெற்ற அமைச்சரவைக் குழு  கூட்டத்தில் நாணய மசோதா 2009-ஐ நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்திய நாணயச் சட்டம் 1906, சிறிய நாணயங்கள் (குற்றங்கள்) சட்டம் 1971, உலோக டோக்கன் சட்டம் 1889, பித்தளை நாணய சட்டம் 1918 ஆகிய இப்போதைய சட்டங்கள் நான்கையும் ஒன்று சேர்த்து, தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு இப்புதிய மசோதா உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த மசோதா 2009 டிசம்பரில் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. பிறகு நிதி நிலைக் குழுவிற்கு ஆய்விற்காக அனுப்பப்பட்டது. இந்தக் குழு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தனது அறிக்கையை மக்களவையில் அளித்தது.

நாணய மசோதா 2009-ஐ திருத்தம் செய்வதற்கு பல பரிந்துரைகள் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தன. நாணயங்களை உருக்குவது மற்றும் அழிப்பது தொடர்பான குற்றங்களில் தண்டனையின் அளவு, 'நாணயம்' என்ற சொற்றொடருக்கான பொருளை ஒரு ரூபாய் தாளுக்கும் விரிவுபடுத்துவது போன்றவை தொடர்பாக பரிந்துரைகள் அளிக்கப்பட்டிருந்தன. 
 

அடுத்த கட்டுரைக்கு