Published:Updated:

கைவிடும் காற்றாலை...இரவு மின்வெட்டு மேலும் அதிகரிக்கும்?

கைவிடும் காற்றாலை...இரவு மின்வெட்டு மேலும் அதிகரிக்கும்?
கைவிடும் காற்றாலை...இரவு மின்வெட்டு மேலும் அதிகரிக்கும்?
கைவிடும் காற்றாலை...இரவு மின்வெட்டு மேலும் அதிகரிக்கும்?

மிழகத்தில் காற்றாலை மூலமான மின் உற்பத்தி குறையப்போவதால்,சென்னையை  தவிர்த்த இதர மாவட்டங்களில், தற்போது பகலில் மட்டுமல்லாது இரவிலும் அமலில்  இருக்கும் இரவு மின்வெட்டு மேலும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது மேட்டூர், தூத்துக்குடி, வடசென்னை அனல் மின் நிலையங்களில்  இருந்தும், ஆரல்வாய் மொழி, பாலகாட், தென்காசி, தேனி ஆகிய இடங்களில் உள்ள  காற்றாலைகளில் இருந்தும் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

காற்றின் வேகம் அதிகரிக்கும் சமயங்களில் காற்றாலை மின்சாரம் முழு அளவில்  கிடைக்கும் போது தட்டுப்பாடு ஓரளவுக்கு சமாளிக்கப்படுகிறது. ஆனால் காற்றின் வேகம்  நிலையற்ற தன்மையில் இருப்பதால் சில சமயம் முழு மின்சாரமும், சில சமயம் மின்  உற்பத்தியே இல்லாமலும் போய் விடுகிறது.இதலால் திடீர் என்று மின்வெட்டு  அதிகரிக்கும் நிலை ஏற்படுகிறது.

##~~##
காற்றாலை மூலம் அதிக பட்சம் 2,500 மெகா வாட்டில் இருந்து 4,000 மெகாவாட்  வரை மின்சாரம் கிடைக்கிறது.இந்நிலையில் இந்த மாத இறுதியில் காற்று வீசும் சீசன்  முடிவடைகிறது. அடுத்து வடகிழக்கு பருவ மழை காலத்தில்தான் மீண்டும் காற்று சீசன்  தொடங்கும். எனவே அடுத்த சில வாரங்களில் மின்சார பற்றாக்குறை நிலைமை மேலும்  மோசம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டுக்கு மத்திய தொகுப்பில் இருந்து கிடைக்க வேண்டிய மின்சாரத்தின் அளவும்  குறைந்து விட்டது. மத்திய தொகுப்பில் உள்ள ஆந்திர மாநிலம்  சிம்காத்ரி, ராமகுண்டம்,  ஒடிசா மாநிலம் தல்சேர், நெய்வேலி ஆகிய மின்நிலையங்களில் இருந்தும், கல்பாக்கம்  அணுமின் நிலையம், கர்நாடக மாநிலம் கைகா அணுமின் நிலையம் ஆகியவற்றில்  இருந்து தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய 2,481 மெகாவாட் மின்சாரத்துக்கு பதில்  1,500 மெகாவாட் மின்சாரமே கிடைக்கிறது.
கைவிடும் காற்றாலை...இரவு மின்வெட்டு மேலும் அதிகரிக்கும்?
மேலும் வடசென்னை அனல் மின் நிலையம்,கூடங்குளம் அணுமின் நிலையம்  ஆகியவற்றில் மின் உற்பத்தி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
தற்போது காற்றாலை மின்சாரம்தான் ஓரளவுக்கு கை கொடுத்து வருகிறது.அதுவும் இந்த  மாத இறுதியில் குறைந்து விடும் நிலை உள்ளதால் வடகிழக்கு பருவ மழை தொடங்கும்  வரை இனிவரும் காலங்களில் மின்சார பற்றாக்குறை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இரவு மின்வெட்டு
இப்போதே சென்னை நகரை தவிர்த்து இதர மாவட்டங்களில் மீண்டும் இரவு நேர  மின்வெட்டு அமலாக தொடங்கிவிட்டது.இரவில் 8 மணி முதல் 9 மணி வரை, பின்னர்  2 முதல் 3, அதனைத் தொடர்ந்து காலை 6 முதல் 8 மணி வரை, பின்னர் காலை 10  மணி முதல் 12 வரை என வரைமுறை இல்லாமல் மின்வெட்டு அமலாகிறது.
இனி காற்றாலை மின் உற்பத்தியும் நின்றுபோனால் நிலைமை மேலும் மோசமடையும்  நிலைமை ஏற்பட்டுள்ளது.