Published:Updated:

நிலக்கரி விவகாரம்: ஜனாதிபதி பிரணாப் தலையிட பா.ஜ. வலியுறுத்தல்!

நிலக்கரி விவகாரம்: ஜனாதிபதி பிரணாப் தலையிட பா.ஜ. வலியுறுத்தல்!
நிலக்கரி விவகாரம்: ஜனாதிபதி பிரணாப் தலையிட பா.ஜ. வலியுறுத்தல்!
நிலக்கரி விவகாரம்: ஜனாதிபதி பிரணாப் தலையிட பா.ஜ. வலியுறுத்தல்!

புதுடெல்லி: நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு பிரச்னையில் தலையிட வேண்டும்  என்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை,எல்.கே. அத்வானி உள்ளிட்ட பா.ஜனதா  தலைவர்கள் நேரில் சந்தித்து வலியுறுத்தி உள்ளனர்.

எல்.கே. அத்வானி, சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி உள்ளிட்ட அக்கட்சியின் மூத்த  தலைவர்கள், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை இன்று அவரது மாளிகையில் சந்தித்தனர்.

அப்போது, நிலக்கரி சுரங்க ஊழல் தொடர்பான பிரச்னையில் தலையிடவேண்டும் என்று  கோரிக்கை விடுத்தனர்.

##~~##
பின்னர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அத்வானி, "நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு  இழப்பு குறித்து அறிக்கை அளித்த மத்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியை  காங்கிரசார் விமர்சனம் செய்து வருகிறார்கள்.
இது அரசியல் சட்டத்துக்கு எதிரானது.நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு பிரச்னையில்  ஜனாதிபதியும் தலையிட வேண்டும் என்று கேட்டுள்ளோம் ” என்றார்.