Published:Updated:

'பிரதமர் பதவிக்கு ராகுல் தகுதியற்றவர்’

'பிரதமர் பதவிக்கு ராகுல் தகுதியற்றவர்’
'பிரதமர் பதவிக்கு ராகுல் தகுதியற்றவர்’
'பிரதமர் பதவிக்கு ராகுல் தகுதியற்றவர்’

கொல்கததா: பிரதமர் பதவிக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி  தகுதியற்றவர் என்று சமாஜ்வாதி கட்சி கடுமையாக சாடியுள்ளது.

இது தொடர்பாக கொல்கத்தாவில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சமாஜ்வாதி  கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் மோகன் சிங்,நாட்டை தலைமையேற்று நடத்திச்  செல்ல ராகுல் திறமையற்றவர் என்றும், சவால்களை சந்திக்கக்கூடிய திறன் அவரிடம்  இல்லை என்றும்  கூறினார்.

3 வது அணிக்கு சமாஜ்வாதி அடித்தளம்

முன்னதாக கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய சமாஜ்வாதி கட்சி்த் தலைவர்  முலாயம் சிங்,"நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு போன்ற பல்வேறு ஊழல்களில் சிக்கியுள்ள  காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு திணறி வருவதாக சாடினார். 

அதேப்போன்று பாரதிய ஜனதா கட்சியையும் சாடிய முலாயம், அக்கட்சி மத்தியில்  ஆட்சியில் இருந்த போது நாட்டு முன்னேற்றத்துக்கு எதுவும் செய்யவில்லை என்று  கூறியுள்ளார்.

##~~##
மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு பல்வேறு ஊழல்களால் திணறி வருகிறது. ஆட்சி  அதிகாரத்தைப் பயன்படுத்தி நாட்டு மக்களுக்கு எந்த நன்மையையும் காங்கிரஸ் கட்சியால்  செய்ய முடியவில்லை.பா.ஜனதா ஆட்சியில் இருந்த போது நாட்டு முன்னேற்றத்துக்கு  எதுவும் செய்யவில்லை.சமாஜ்வாதி கட்சி மத்தியில் பொறுப்பேற்கும் நேரம்  வந்துவிட்டது.
வரும் 2014 ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சியே  மத்தியில் ஆட்சி அமைக்கும்” என்றார்ர்.