Published:Updated:

கமல் குறித்து ரஜினி பேசியவற்றின் பின்னணி என்ன? தமிழருவி மணியனின் ஆரூடம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கமல் குறித்து ரஜினி பேசியவற்றின் பின்னணி என்ன? தமிழருவி மணியனின் ஆரூடம்
கமல் குறித்து ரஜினி பேசியவற்றின் பின்னணி என்ன? தமிழருவி மணியனின் ஆரூடம்

கமல் குறித்து ரஜினி பேசியவற்றின் பின்னணி என்ன? தமிழருவி மணியனின் ஆரூடம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

"அரசியலில் எதிர்ப்புதான் மூலதனம். அந்த எதிர்ப்பு இல்லாமல் யாரும் வளர முடியாது. போர் வரட்டும்" அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்று நடிகர் ரஜினிகாந்த் தன் ரசிகர்கள் மத்தியில் பேசினார். இதன்மூலம் அவர் அரசியலுக்கு வருவதற்கு தயராகிறார் என்பது தெரியவந்தது. ஆனால், நடிகர் கமல் களத்தில் இறங்கி மத்திய-மாநில அரசுகளுக்கு எதிராகப் பேசியும், டுவிட்டரில் தனது கருத்துகளை பதிவிட்டும் வருகிறார். கமலின் கருத்துகளை எதிர்க்கும்விதமாக தமிழக அமைச்சர் டி. ஜெயக்குமார், "அரசியலுக்கு வந்துவிட்டு கமல் கருத்துகளைத் தெரிவிக்கட்டும்" என்றார்.

அதற்குப் பதிலளித்த கமல், "நான் எப்போதோ அரசியலுக்கு வந்துவிட்டேன்" என்றார். இதன்மூலம் அவர் அரசியலில் இறங்குவார் என்பது உறுதியானது. அதை உறுதிப்படுத்தும்விதமாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயனைச் சந்தித்து கமல் பேசினார். அதன்பின்னர் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், கமலின் இல்லத்துக்கே சென்று அவரைச் சந்தித்துப் பேசினார். இப்படி கமலின் அரசியல் செயல்பாடுகள் வேகமெடுத்துள்ள நிலையில், ரஜினி மட்டும் அமைதிகாத்து வருகிறார். ஆனால், 'அவர் அரசியலுக்கு வருவார்' என தமிழருவி மணியன் மற்றும் ரஜினிக்கு நெருக்கமானவர்கள் பலரும் தொடர்ந்து கூறி வருகின்றனர். 

இந்த நிலையில் மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மணிமண்டப திறப்பு விழா தமிழக அரசின் சார்பில் சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்ட ரஜினிகாந்த், சிவாஜி கணேசனுக்கு புகழாரம் சூட்டிப் பேசுகையில், "சிவாஜி கணேசன் நடிப்பில் மட்டுமல்ல; அரசியலிலும் அவருடைய ஜூனியர்களுக்கு பாடம் கற்றுத் தந்துவிட்டுச் சென்றுள்ளார். அவர், அரசியலில் தனிக்கட்சி ஆரம்பித்து அவருடைய சொந்தத் தொகுதியிலேயே நின்று தோற்றுப் போனார். அது அவருக்கு நடந்த அவமானம் இல்லை. அந்தத்தொகுதி மக்களுக்கு நடந்த அவமானம். அரசியலில் வெற்றி அடையவேண்டும் என்றால், திரைப்படத்தில் நடித்து செல்வாக்கு, புகழ் பெற்றிருந்தால் மட்டும் போதாது. அதற்கும் மேல் ஏதோ ஒன்று இருக்க வேண்டும். அது மக்களுக்கு மட்டும்தான் தெரியும். எனக்கு சத்தியமா தெரியாது. ஒருவேளை கமல்ஹாசனுக்குத் தெரியும் என்று நான் நினைக்கிறேன். தெரிஞ்சாலும் அவர் அதை எனக்குச் சொல்லமாட்டார். இரண்டுமாதத்துக்கு முன்பு ஒருவேளை நான் கேட்டிருந்தால், சொல்லி இருப்பாரோ என்னவோ தெரியவில்லை. திரை உலகில், நீங்கதான் மூத்தவர். அதை நீங்கதான் எனக்குச் சொல்லணும்னு கேட்டா, 'என் கூட வா சொல்கிறேன்' என்கிறார்" என்று கமலைப்பற்றியும் அவருடைய அரசியல் நிலைப்பாட்டைப் பற்றியும் பேசினார்.

ரஜினியின் இந்தப் பேச்சு தமிழக அரசியல் களத்தை உற்றுநோக்க வைத்துள்ளது. "உண்மையில் கமலுக்கு தன் பேச்சின் மூலம் மறைமுகமாக ரஜினி உணர்த்துவதன் பொருள் என்ன?" எனப் பலரும் விவாதிக்கத் தொடங்கியுள்ளனர். மேலும் "ரஜினியின் இந்தப் பேச்சு கமலுக்குப் பெருமை சேர்க்கும்வகையில் இல்லை" என்கிறார்கள் அரசியல் ஆர்வலர்கள்.

சிவாஜி மணிமண்டப விழாவில் ரஜினியின் பேச்சு குறித்து அரசியல் விமர்சகரும், காந்திய மக்கள் இயக்கத் தலைவருமான தமிழருவி மணியனிடம் பேசினோம்.

"சர்வ நிச்சயமாக, 'அரசியல் கட்சி தொடங்கப் போகிறேன்' என்பதை ரஜினி தன் பேச்சின் மூலம் உணர்த்தியுள்ளார். 'இரண்டு மாதங்களுக்கு முன்புகேட்டிருந்தால் கமல் சொல்லியிருப்பார். ஆனால், இப்போது அவர் சொல்லமாட்டார்' என்று பேசியிருப்பது, 'அரசியல் கட்சி தொடங்கும் நிலைக்கு வந்துவிட்டார் கமல். அதனால் தற்போது தனக்கு உதவிக்கரம் நீட்ட அவர் தயங்குவார்' என்பதை உணர்த்தும் வகையில் ரஜினி அவ்வாறு பேசியுள்ளார்.

சிவாஜி கணேசன் போன்று வேறு ஒரு நடிகனை தமிழ்த் திரையுலகில் நாம் பார்க்க முடியாது. 1989-ல் திருவையாறு தொகுதியில் ஜானகி

அணியுடன் கூட்டணி வைத்துப் போட்டியிட்ட அவர், தோல்வியடைந்தார். சிவாஜியின் சொந்த ஊரான சூரக்கோட்டை இந்தத் தொகுதிக்கு மிக அருகில்தான் உள்ளது. ஆனாலும், சிவாஜியால் அந்தத் தேர்தலில் ஜெயிக்க முடியாமல் போனது. அதேபோலத்தான் அகில இந்திய அளவில் கமல் போன்ற ஒரு நடிகரைப் பார்க்க முடியாது. இந்த சூழ்நிலையில், சிவாஜி கணேசனோடு கமலை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியுள்ளது. 'நடிப்பில் சிவாஜியின் வெற்றிடத்தை கமல் நிரப்புவார்' என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. 'அரசியலில் அதுமட்டுமே போதாது' என்பதைத்தான் ரஜினி தன் உரையில் தெரிவித்துள்ளார் என இங்கு பொருள் கொள்ள வேண்டியுள்ளது. நடிப்பு, புகழ், பணம் மட்டுமே அரசியல் வாழ்வுக்கு போதாது என்பதைத்தான், இங்கே கமலுக்கும் பொருத்திப் பார்க்க வேண்டியுள்ளது. சிவாஜி கணேசனுக்கு செல்வாக்கு மிகுந்த மனிதர்கள் ரசிகர்களாக இருந்தனர். தற்போது கமலுக்கும் அவ்வாறான ரசிகர்கள் உள்ளனர். இவர்களுடைய வாக்குவங்கி கமலுக்கு இருக்கலாம். ஆனால் கூலித் தொழிலாளியிடமோ அல்லது ஒரு ஆட்டோ ஓட்டுநரிடமோ 'உங்களுடைய ஓட்டு ரஜினிக்கா? கமலுக்கா?' என்று கேட்டால் அவர்களிடம் இருந்து 'ரஜினிக்கு' என பதில் தெளிவாக வரும். அதனால் கமலின் நடிப்பைப் மீறி மக்களை ஈர்க்கக்கூடிய ஏதோ ஒரு விஷயம் ரஜினியிடம் உள்ளது.

நடிகர் கமல்ஹாசனுக்கு நான் வைக்கும் கோரிக்கை. 'இந்த சிஸ்டம் கெட்டுப் போய்விட்டது' என இரண்டு பேரும் பேசுகிறீர்கள். ஊழலற்ற ஆட்சியை தமிழகம் காண வேண்டும் என்றால், இரண்டு திராவிடக் கட்சிகளையும் வீட்டுக்கு அனுப்ப வேண்டும். கமலைவிட செல்வாக்கு உள்ள மனிதர் ரஜினி என்பது கமல்ஹாசனுக்கும் தெரியும். அதனால், தன் நிலையை உணர்ந்து ரஜினியின் கரத்தை கமல்ஹாசன் வலுப்படுத்துவதன் மூலம்தான், இந்த சிஸ்டத்தை அவர் கூறுவதுபோல் ஒழுங்குபடுத்த முடியும். அதற்கு மாறாக, கமல் தனியாக ஒரு கட்சியைத் தொடங்கி சுற்றுப்பயணம் மேற்கொண்டால், அ.தி.மு.க மற்றும் தி.மு.க-வுக்கு எதிரான வாக்குகள் சிதறுவதற்குத்தான் வழிவகை ஏற்படும். அதற்கு கமல் காரணமாகி விடுவார்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு