Published:Updated:

மாணிக்கம் ராமஸ்வாமி காலமானார்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மாணிக்கம் ராமஸ்வாமி காலமானார்!
மாணிக்கம் ராமஸ்வாமி காலமானார்!

மாணிக்கம் ராமஸ்வாமி காலமானார்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மாணிக்கம் ராமஸ்வாமி காலமானார்!

லாயல் டெக்ஸ்டைல் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான மாணிக்கம் ராமஸ்வாமி நேற்று நள்ளிரவு காலமானார். அவருக்கு வயது 63

பெரும் தொழிலதிபரான தியாகராஜ செட்டியாரின் வழித்தோன்றலான மாணிக்கம் ராமஸ்வாமி,  சென்னை ஐ.ஐ.டி-யில் பி.டெக் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படித்தவர். கல்லூரியில் மிக நன்றாகப் படித்ததால், பான்கோ ஃபவுண்டேஷனில் கோல்டு மெடல் விருது அவருக்குக் கிடைத்தது. 

1975-ல் தனது குடும்ப நிறுவனமான லாயல் டெக்ஸ்டைல் நிறுவனத்தின் நிர்வாகப் பொறுப்பை ஏற்றார். வெறும் 2.5 கோடி ரூபாயாக  இருந்த இந்த நிறுவனத்தின் வருமானத்தை 200 கோடி ரூபாயாக உயர்த்தினார். இன்றைக்கு அந்த நிறுவனத்தின் விற்று வரவு ரூ.1,500 கோடியாகும். லாயல் டெக்ஸ்டைல் நிறுவனத்துக்குச் சொந்தமான மில்கள் தமிழகத்திலும் ஆந்திராவிலும் உள்ளன. 175 ஆண்டு பாரம்பர்யமான பி.ஓ.ஆர்.ஆர் அண்ட் குரூப் நிறுவனத்தை வாங்கி, தனது நிறுவனத்துடன் இணைத்துக்கொண்டவர். 

கல்வித்துறையில் மிகுந்த ஈடுபாடுகொண்டவராக இருந்தார் மாணிக்கம் ராமஸ்வாமி. மதுரையில் உள்ள தியாகராஜர் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மென்ட்டை அவர் திறம்பட நடத்திவந்தார். மதுரை தெப்பக்குளத்தில் உள்ள மதுரை தியாகராஜர் மாடல் ஸ்கூலை நடத்தி வந்தார். ஜவுளித் தொழில்துறை எதிர்நோக்கும் பிரச்னைகள் பற்றி அவர் தொடர்ந்து சிந்தித்தும் பேசியும் எழுதியும் வந்தார். ஜவுளித் தொழிலுக்கான அமைப்பான டெக்ஸ்புரோசில் (TEXPROCIL) என்கிற அமைப்புக்குத் துணைத் தலைவராக இருந்துள்ளார். தென் இந்திய மில் அசோசியேஷன் அமைப்பின் தலைவராகவும் இருந்திருக்கிறார். சி.ஐ.ஐ அமைப்பின் தமிழ்நாடு பிரிவின் தலைவராகவும் ஓராண்டு காலம் பணியாற்றியிருக்கிறார் மாணிக்கம் ராமஸ்வாமி.

தொழில்துறை வட்டாரத்தில் பலரும் வியந்து நோக்கும் நேர்மையாளராக இருந்தார் அவர். அரசை, மக்களை, தொழிலாளர்களை ஏமாற்றாமல் தொழில் நடத்துவதில் இம்மி அளவுகூட பிசகக் கூடாது என்பதை வலியுறுத்திவந்ததுடன், அதற்கொரு உதாரணமாகவும்  இருந்துவந்தார். மாணிக்கம் ராமஸ்வாமியின் மனைவி, வள்ளி மாணிக்கம் ராமஸ்வாமி. இவர்களின் ஒரே மகள் விசாலா ராமஸ்வாமி ஆவார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு