Published:Updated:

தமிழிசை என்ன கவர்னரா? கொந்தளிப்பில் ஹெச்.ராஜா ஆதரவாளர்கள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
தமிழிசை என்ன கவர்னரா? கொந்தளிப்பில் ஹெச்.ராஜா ஆதரவாளர்கள்
தமிழிசை என்ன கவர்னரா? கொந்தளிப்பில் ஹெச்.ராஜா ஆதரவாளர்கள்

தமிழிசை என்ன கவர்னரா? கொந்தளிப்பில் ஹெச்.ராஜா ஆதரவாளர்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தமிழிசை என்ன கவர்னரா? கொந்தளிப்பில் ஹெச்.ராஜா ஆதரவாளர்கள்

பிஜேபியின் தேசியச் செயலர் ஹெச்.ராஜா தந்தை இறந்த துக்கம் விசாரிக்க காரைக்குடி வந்தார் மு.க.அழகிரி. சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா கல்லூரியில் பி.எட் வகுப்புப் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். சிறந்த யோகா பயிற்சியாளர். மணிக்கணக்கில் யோகா செய்து வருபவர். எவ்வளவு பெரிய வசதி இருந்தாலும் சைக்கிளில் உலா வருபவர். மேலும் தன்னுடைய வேலைகளைத் தானே செய்துகொள்பவர் என்கிற பெருமைகள் இவருக்கு உண்டு என்கிறார்கள் இப்பகுதி மக்கள். இப்படிப்பட்டவர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

தமிழிசை என்ன கவர்னரா? கொந்தளிப்பில் ஹெச்.ராஜா ஆதரவாளர்கள்

காரைக்குடி சுப்ரமணியபுரம் 9வது வீதியில் அமைந்துள்ள ஹெச்.ராஜா வீட்டிற்கு தமிழக அமைச்சர்கள் பாஸ்கரன், உதயக்குமார் போன்றவர்கள் தமிழக முதல்வர் சார்பில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உதயக்குமார், பத்திரிகையாளர் சந்திப்பில் ஆழ்ந்த இரங்கலோடு, வாழ்த்தும் சொன்னது சமூக வலைதளங்களில் பரபரப்பானது. இந்தச் சூழ்நிலையில் மு.க.அழகிரி, ஹெச்ராஜா வீட்டிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி துக்கம் விசாரித்தது ராஜாவிற்கே சந்தோசத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இதுபற்றி ராஜா ஆதரவாளர்களிடம் கேட்டபோது,''ஹெச்.ராஜா பிஜேபியின் தேசியச் செயலாளர். அவர் அப்பா ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் பணியாற்றி சிறை சென்றவர். அப்படிப்பட்டவர் இறந்துபோயிருக்கிறார். அவருடைய இறுதி அஞ்சலிக்கு மத்திய அமைச்சர் பொன்னாரோ, மாநிலத் தலைவர் தமிழிசையோ கலந்துகொள்ளவில்லை. இவர்கள் பட்டியலில்  மாநிலக் கட்சிப் பொறுப்பாளர் முரளிதரராவ் கூட கலந்துகொள்ளவில்லை என்பது எங்களுக்கு வருத்தமாக இருக்கிறது. பிஜேபியில் கோஷ்டி அரசியல் இருக்கிறது என்பதை இவர்கள் வெளிப்படையாகவே கட்சியினருக்குக் காட்டியிருக்கிறார்கள். இதையும் கட்சி மேலிடம் வேடிக்கைதான் பார்த்துக்கொண்டிருக்கிறது. தமிழிசை என்ன கவர்னரா? இறுதி அஞ்சலி செலுத்த காரைக்குடிக்கு வந்திருந்தால் கட்சி நிர்வாகிகள் எவ்வளவு சந்தோசப்பட்டிருப்பார்கள்'' என்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு