Published:Updated:

ஆரோக்கியமானவரை பரிசோதனை செய்த அமைச்சர்! கொந்தளித்த நோயாளிகள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஆரோக்கியமானவரை பரிசோதனை செய்த அமைச்சர்! கொந்தளித்த நோயாளிகள்
ஆரோக்கியமானவரை பரிசோதனை செய்த அமைச்சர்! கொந்தளித்த நோயாளிகள்

ஆரோக்கியமானவரை பரிசோதனை செய்த அமைச்சர்! கொந்தளித்த நோயாளிகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஆரோக்கியமானவரை பரிசோதனை செய்த அமைச்சர்! கொந்தளித்த நோயாளிகள்

நோயாளி என்ற பெயரில் மருத்துவமனை ஊழியருக்கே சிகிச்சை அளித்து போஸ் கொடுத்த அமைச்சரின் செயல் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் பரவி வரும் டெங்குக் காய்ச்சலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் உள்ள மாவட்டத் தலைமை மருத்துவமனைகளில் காய்ச்சலுக்கு சிகிச்சையளிக்க ஏதுவாக 24 மணி நேரமும் இயங்கும் சிறப்புப் பிரிவு தொடங்க உத்தரவிடப்பட்டது. 
இதன்படி ராமநாதபுரத்தில் உள்ள மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையில் நேற்று காய்ச்சலுக்காக 24 மணி நேரமும் இயங்கும் சிறப்புப் பிரிவு தொடங்கப்பட்டது. இதன்படி ஆண்கள் பிரிவு, பெண்கள் பிரிவு, குழந்தைகள் பிரிவு மற்றும் உள் நோயாளிகள் பிரிவு எனத் தனித்தனி பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன.

இந்தச் சிறப்பு சிகிச்சைப் பிரிவினை நேற்று தொடங்கி வைத்த அமைச்சர் டாக்டர். மணிகண்டன், மருத்துவமனையைப் பார்வையிட்டார். பின்னர் மருத்துவர் அறைக்குச் சென்ற மணிகண்டன் நோயாளிகளுக்குப் பரிசோதனை செய்ய விரும்பினார். இதை எதிர்பார்க்காத மருத்துவ அதிகாரிகள் உடனடி நோயாளியாக மருத்துவமனை ஊழியரான முருகேசன் என்பவரை அமைச்சரின் அருகே அமர வைத்தனர். தனக்கு அருகில் அமர வைக்கப்பட்ட  ஆரோக்கியமான அந்த மருத்துவமனை ஊழியருக்கு பரிசோதனை செய்த அமைச்சர் மணிகண்டன் போட்டோவிற்கு போஸ் கொடுத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார். அமைச்சர் பரிசோதனை செய்ததை மாவட்ட ஆட்சியரும், ஆளும் கட்சிக்காரர்களும் சீரியஸாக கவனித்துக் கொண்டிருந்தனர்.

மாவட்டத் தலைமை மருத்துவமனையான இங்கு ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்லும் நிலையில் அமைச்சரின் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனை ஊழியரையே நோயாளியாக அமர வைத்து நாடகம் ஆடிய மருத்துவமனை அலுவலர்களின் தில்லாலங்கடி ஏமாற்று வேலையும், அதைக் கண்டுகொள்ளாமல் சிகிச்சை அளிப்பதுபோல் போஸ் கொடுத்த அமைச்சர் மணிகண்டனின் செயலையும் கண்ட மாவட்ட மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு