Published:Updated:

’ஜெயலலிதா மரணம் குறித்து அமைச்சர்கள் பேசத் தடையில்லை’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
’ஜெயலலிதா மரணம் குறித்து அமைச்சர்கள் பேசத் தடையில்லை’
’ஜெயலலிதா மரணம் குறித்து அமைச்சர்கள் பேசத் தடையில்லை’

’ஜெயலலிதா மரணம் குறித்து அமைச்சர்கள் பேசத் தடையில்லை’

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஜெயலலிதா மரணம் குறித்து அமைச்சர்கள் பேசத் தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது. 

’ஜெயலலிதா மரணம் குறித்து அமைச்சர்கள் பேசத் தடையில்லை’


உடல் நலக்குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, கடந்தாண்டு டிசம்பர் 5-ம் தேதி உயிரிழந்ததாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அவரது மரணத்தில் சந்தேகங்கள் இருப்பதாகப் பல்வேறு தரப்பினரும் கூறிவந்த நிலையில், ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஆகஸ்ட் 17-ம் தேதி அறிவித்தார். 

ஆனால், அறிவிப்பு வெளியாகி 40 நாள்களாகியும் அதுதொடர்பாக தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றுகூறி குடவாசலைச் சேர்ந்த முருகானந்தம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். மேலும், ஜெயலலிதா மரணம் தொடர்பாக தமிழக அமைச்சர்கள் கூறி வரும் கருத்துகள் விசாரணையைப் பாதிக்கும் என்பதால், அமைச்சர்கள் கருத்துக் கூறத் தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கூறப்பட்டிருந்தது. வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது.  

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது என்ற அரசு தரப்பு வாதத்தை ஏற்று வழக்கை முடித்து வைப்பதாக உத்தரவிட்டது. மேலும், ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைச்சர்கள் கருத்துக் கூறத் தடை விதிக்க முடியாது என்றும் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு