Published:Updated:

உள்ளத்திலும், உருவத்திலும் கருப்பானவர்: விஜயகாந்த் மீது ஜெ. மறைமுக தாக்கு!

உள்ளத்திலும், உருவத்திலும் கருப்பானவர்: விஜயகாந்த் மீது ஜெ. மறைமுக தாக்கு!
உள்ளத்திலும், உருவத்திலும் கருப்பானவர்: விஜயகாந்த் மீது ஜெ. மறைமுக தாக்கு!
உள்ளத்திலும், உருவத்திலும் கருப்பானவர்: விஜயகாந்த் மீது ஜெ. மறைமுக தாக்கு!

ஸ்ரீரங்கம்:"உள்ளத்திலும், உருவத்திலும் கருப்பானவர்” என்று தேமுதிக

உள்ளத்திலும், உருவத்திலும் கருப்பானவர்: விஜயகாந்த் மீது ஜெ. மறைமுக தாக்கு!

தலைவர்  விஜயகாந்த் குறித்து குட்டிக்கதை கூறி அவரை மறைமுகமாக தாக்கிப்பேசினார்.

இன்று ஸ்ரீரங்கம் வந்த  முதலமைச்சர் ஜெயலலிதா பல்வேறு புதிய நலப் பணிகளுக்கு  அடிக்கல் நாட்டியும், ஏற்கனவே துவங்கி நடந்து முடிந்த பணிகளை திறந்து வைத்தார்.
 
இன்று அடிக்கல் நாட்டப்பட்ட திட்டங்களில், ரூ.22 கோடி செலவில், ஸ்ரீரங்க  தொகுதியில் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டுகளில் பாதாள சாக்கடைத் திட்டம்,   ரூ.8.67 கோடி செலவில், ஸ்ரீரங்கம் தொகுதியில்  வண்ணத்துப்பூச்சி பூங்கா மற்றும்  நட்சத்திர வனம் அமைப்பது, ஒன்றரை கோடி செலவில் ஸ்ரீரங்கம் பஞ்சக்கடையில்  உள்விளையாட்டரங்கம் அமைப்பது ஆகியவை அடங்கும்.

ஜெயலலிதா அடிக்கல் நாட்டியுள்ள நலப்பணிகளின் மொத்த மதிப்பு ரூ.82 கோடியே 63  லட்சமாகும்.

ஏற்கனவே ரூ. 27 கோடியே 13 லட்சத்து 88 ஆயிரம்  செலவில் கட்டி முடிக்கப்பட்ட  அரசு நலத்திட்டங்களையும் ஜெயலலிதா துவக்கி வைத்தார். அதில், பேட்டவாய்க்கரை  பகுதியில் ரூ.26 லட்சம் செலவில் கட்டப்பட்ட புதிய கால்நடை மருந்தகம், ஸ்ரீரங்கம்  வடக்கு தேவி தெருவில் கட்டி முடிக்கப்பட்ட நூலக வளாகம், ரூ.68 ஆயிரம் செலவில்  4 இடங்களில் கட்டப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான கழிவறைகள், ஸ்ரீரங்கத்தில்  ரூ.96 லட்சம் செலவில் கட்டப்பட்ட  கலைப் பண்பாட்டுத் துறை வளாகம்  உள்ளிட்டவற்றை முதல்வர் துவக்கி வைத்தார்.

##~~##
மேலும், 34,000 பயனாளிகளுக்கு  50 கோடியே 62 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட  உதவிகளையும் முதல்வர் வழங்கினார். இன்று அடிக்கல் நாட்டப்பட்ட மற்றும் திறந்து  வைக்கப்பட்ட நலத்திட்டப் பணிகளுக்கான மொத்த மதிப்பு ரூ.170 கோடியாகும்.
இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து பேசிய முதலமைச்சர்,குட்டிக் கதை கூறி விஜயகாந்தை  மறைமுகமாக தாக்கினார்.அவர் கூறியதாவது:
அதில்,பெரு வணிகர் ஒருவரும்,சிறு வணிகர் ஒருவரும் நீண்டகால நண்பர்களாக  இருந்து வந்தனர்.திடீரென இருவருக்குள்ளும் சிறு கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும்  பிரிந்து விட்டனர். இந்த நிலையில், பெரு வணிகர் மீது விரோதம் கொண்ட சிறு  வணிகர் அவர் மீது ஒரு வழக்குத் தொடர எண்ணினார்.இதற்காக அவருக்குத் தெரிந்த  ஒரு வழக்கறிஞரைக் காணச் சென்றார்.
ஆனால் அந்த வழக்கறிஞரோ, இந்த வழக்கை எடுத்துக் கொள்ள சம்மதிக்கவில்லை.  எனினும், சிறு வணிகர் வழக்கறிஞரை தொடர்ந்து சந்தித்து, வழக்குத் தொடர்வது  குறித்து வற்புறுத்தி வந்தார். ஒரு கட்டத்தில் வழக்கறிஞரும் வழக்கை எடுத்துக் கொள்ள  சம்மதித்து நீதிமன்றத்தில் பெரு வணிகர் மீது வழக்குத் தொடர்ந்தார்.
வழக்கு விசாரணை முடிந்து சிறு வணிகருக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது.இதையடுத்து,  சிறு வணிகர்,எல்லோரிடமும், இந்த வழக்கில், தனக்கு சாதகமான விஷயங்கள்  இருந்ததால், இயல்பாகவே வழக்கின் முடிவு வெற்றியாக அமைந்துள்ளது. இதில்  வழக்கறிஞரின் வாதச் சிறப்பு ஏதும் இல்லை என்று அவதூறாக பேசி வந்தார்.
இந்த சிறு வணிகர் நிறத்திலும்,உள்ளத்திலும் கருப்பானவர்.இவரைப் போலவே சிலர்  உள்ளனர்.நம்மை வேண்டி அவர்களுக்கு வேண்டிய காரியங்களை முடித்துக் கொண்டு,  அதில் வெற்றியும் பெற்றுவிட்டு, பிறகு நம்மையே எதிர்த்தும், பழித்தும் பேசுவார்கள்”.
இவ்வாறு ஜெயலலிதா கூறினார்.