Published:Updated:

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை முன்ஜாமீன்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை முன்ஜாமீன்!
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை முன்ஜாமீன்!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை முன்ஜாமீன்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பணமோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை முன்ஜாமீன்!


போக்குவரத்துத்துறை அமைச்சராக செந்தில் பாலாஜி பதவி வகித்தபோது, வேலை வாங்கித் தருவதாக 16 பேரிடம் ரூ.95 லட்சம் பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாகப் புகார் எழுந்தது. இதுதொடர்பாக மோசடி, கொலைமிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் செந்தில் பாலாஜி உள்ளிட்ட 3 பேர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் தனக்கு முன் ஜாமீன் வழங்கக் கோரி செந்தில் பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். 

இந்த மனு கடந்த 27-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, அரசுத் தலைமை வழக்கறிஞர் ஆஜராகி வாதாட இருப்பதால், கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும் என்று அரசுத் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து அந்த வழக்கின் விசாரணையை அக்டோபர் 3-ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிமன்றம், அதுவரை செந்தில் பாலாஜியைக் கைது செய்யத் தடை விதித்திருந்தது. இந்த வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று வந்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம், செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. மத்தியக் குற்றப்பிரிவு போலீஸார் முன்பாகத் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. 
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு