'ஈ.எஸ்.ஐ என்பது தொழிலாளர் நலனுக்கான மருத்துவ உதவிகளை வழங்கும் கழகம். இதன் நோக்கம் மருத்துவக் கல்வி அளிப்பது அல்ல; எனவே, இதன்கீழ் செயல்படும் கல்லூரிகளை நடத்த முடியாது’ என்ற மத்திய அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து, அந்தக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

கடந்த வாரம் மத்தியத் தொழிலாளர் நல இணைஅமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயாவை, டெல்லியில் அவருடைய அலுவலகத்தில் சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளனர் தமிழக மாணவர்கள். தமிழகத்தில் மட்டுமல்லாது டெல்லி, பெங்களூரு, மும்பை, கொல்கத்தா, ஹரியானா ஆகிய இடங்களிலும் மாணவர்கள் போராட்டத்தைத் தீவிரப்படுத்தி உள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சென்னை ஈ.எஸ்.ஐ கல்லூரி மாணவர்களைச் சந்தித்தோம்.

''ஈ.எஸ்.ஐ கழகம் தொழிலாளர்களுக்கு மருத்துவச் சேவை அளிப்பதற்காக அவர்களிடம் இருந்து பெறப்பட்ட நிதிமூலம் தொடங்கப்பட்டு, சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. கடந்த காங்கிரஸ் ஆட்சியில் ஈ.எஸ்.ஐயின் கீழ் மருத்துவக் கல்லூரிகள் தொடங்க சட்டத் திருத்தங்கள் செய்யப்பட்டு இந்தியா முழுவதும் நர்சிங், பல் மற்றும் பொது மருத்துவத்துக்காக 13 மருத்துவக் கல்லூரிகள் ஆரம்பிக்கப்பட்டன. 2011-ம் ஆண்டு சென்னையில் இந்தக் கல்லூரி தொடங்கப்பட்டது. ஆனால், கடந்த டிசம்பர் மாதம் தொழிலாளர் காப்புறுதி திட்ட கழகத்தின் 163-வது கூட்டத்தில், 'மருத்துவ சேவைதான் எங்களுக்கு முக்கியம். இனி, புதிதாக எந்த ஒரு ஈ.எஸ்.ஐ கல்லூரிகளும் தொடங்கப்படாது. ஏற்கெனவே, இருக்கும் கல்லூரிகளிலும் புதிய மாணவர் சேர்க்கை இருக்காது’ என்ற அறிவிப்பை வெளியிட்டது மத்திய அரசு. இதனால் அதிர்ச்சியடைந்த நாங்கள், நாடு முழுவதும் உள்ள ஈ.எஸ்.ஐ கல்லூரிகளில் போராட்டத்தைத் தொடங்கினோம். இதன் காரணமாக 'இந்தக் கல்லூரிகளை ஏற்று நடத்த, மாநில அரசுக்குப் பரிந்துரைக்கிறோம்’ என்று ஜனவரி 31-ம் தேதி வரை கெடு அளித்தனர். ஆனால், இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. டெல்லியில் மத்திய இணையமைச்சரைச் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தோம். இருந்தும் 18-ம் தேதி நடந்த ஈ.எஸ்.ஐ கழகத்தின் 164-வது கூட்டத்திலும் எங்களின் கோரிக்கைக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவேதான் நாங்கள் இந்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளோம்'' என்றார் ஈ.எஸ்.ஐ கல்லூரி முதுகலை மாணவி வீணா வேதனையுடன்.

இளங்கலை மாணவரான பாலாஜி, ''இந்தக் கல்லூரியில் முதுகலை, இளங்கலை இரண்டையும் சேர்த்து மொத்தம் 228 பேர் படித்து வருகிறோம். 12 பேர் முதுகலைப் படிப்பு முடித்து ஈ.எஸ்.ஐ மருத்துவமனைகளில் பணிபுரிந்து வருகிறார்கள். ஆனால், அவர்களுக்கும் தக்க சான்றிதழ் வழங்கப்படவில்லை. மத்திய அரசின் தற்போதைய முடிவால் எங்களின் படிப்பு கேள்விக்குறியாகி உள்ளது. இந்தக் கல்லூரிகள் மூடப்பட்டால், இந்தியா முழுவதும் உள்ள பல ஈ.எஸ்.ஐ கல்லூரி மாணவர்களின் படிப்பு விரயமாகும். எங்களின் கோரிக்கை என்னவென்றால், இந்தக் கல்லூரிகளை மத்திய அரசோ, மாநில அரசோ நடத்த வேண்டும் என்பதுதான். முதலில் கல்லூரியை நாங்கள் ஏற்று நடத்துவோம் என்று கூறி இருந்த கர்நாடக அரசும் நிதிநிலை, வழிமுறைகள் காரணமாகப் பின்வாங்கிவிட்டது.

மாநில அதிகாரிகளைச் சந்தித்தோம். இது மத்திய அரசு எடுக்க வேண்டிய முடிவு, நாங்கள் எதுவும் செய்ய முடியாது என்று கைவிரித்துவிட்டார்கள். இவர்களுக்கு மருத்துவச் சேவைதான் முக்கியம் என்கிறார்கள். அப்படி என்றால், அதற்கான மருத்துவர்களை எங்கிருந்து உருவாக்குவார்கள்? எங்களின் படிப்புக்கு அரசு வழி செய்யும் வரை தொடர்ந்து போராடுவோம்'' என்று கூறினார்.

ஈ.எஸ்.ஐ போர்டு உறுப்பினர் சந்திர பிரகாஷ் சிங், ''மாநில அரசுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டு அவர்கள் இதில் போதிய ஆர்வம் காட்டவில்லை.

அதுமட்டுமல்லாமல் அதற்கு நிறைய வழிமுறைகள் உள்ளன. அதனால், இதை நாங்களே தொடர்ந்து நடத்துவது பற்றி விவாதித்து வருகிறோம். மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படாத வகையில் எங்கள் முடிவு இருக்கும்'' என்றார்.

அந்த நல்ல முடிவை விரைவாக எடுங்கள்.

மா.அ.மோகன் பிரபாகரன், படங்கள்: அருண் பென்னி