Published:Updated:

’ஓசோனைப் பாதுகாக்க வேண்டி மத்திய அமைச்சருக்குக் கடிதம் எழுதிய திருப்பூர் விவசாயி’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
’ஓசோனைப் பாதுகாக்க வேண்டி மத்திய அமைச்சருக்குக் கடிதம் எழுதிய திருப்பூர் விவசாயி’
’ஓசோனைப் பாதுகாக்க வேண்டி மத்திய அமைச்சருக்குக் கடிதம் எழுதிய திருப்பூர் விவசாயி’

’ஓசோனைப் பாதுகாக்க வேண்டி மத்திய அமைச்சருக்குக் கடிதம் எழுதிய திருப்பூர் விவசாயி’

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஓசோனைப் பாதுகாக்க இந்தியா சார்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன்  மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்குத் திருப்பூரைச் சேர்ந்த விவசாயி ஒருவர் கடிதம் எழுதியுள்ளார்.

’ஓசோனைப் பாதுகாக்க வேண்டி மத்திய அமைச்சருக்குக் கடிதம் எழுதிய திருப்பூர் விவசாயி’

இயற்கை வேளாண் ஆர்வலரும், தமிழ்நாடு விவசாயிகள் விழிப்புஉணர்வு இயக்கத்தின் இணைச் செயலாளருமாகச் செயல்பட்டு வருபவர் ஜி.ராமநாதன். திருப்பூர் வட்டாரத்தின் விவசாயப் பிரச்னைகளில் முழு ஈடுபாட்டுடன் இயங்கி வரும் இவர், மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எழுதியுள்ள கடிதத்தில்,  ’பஞ்ச பூதங்களால் பூமியைச் சுற்றி ஓசோன் வளிமண்டலத்தின் பாதுகாப்பு உருவான பின்னர், இப்பூமியில் வாழும் உயிர்கள் அனைத்தும் உயிரோட்டத்துடன் இயங்கிக்கொண்டிருந்தன. ஆனால், உலக மயமாக்கலின் விளைவுகளால், இந்தியா என்ற விவசாய நாட்டைத் தொழில் மயமாக மாற்றி, உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் மூலம் மூலப்பொருள்களின் ஏற்றுமதிக்கு அனுமதியளித்திருக்கிறார்கள்.

இதனால் இந்தியாவின் விவசாயப் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு, அவை கருப்புப் பண டாலர்களாகவும், யூரோக்களாகவும் அந்நிய வங்கிகளில் குவிந்துகொண்டு இருக்கிறது. தொழில் மயமாக்கப்பட்ட இந்நாட்டில் தொழிற்சாலைகளும், வாகனங்களும் வெளியேற்றும் அதிகப்படியான புகையால், இங்கு வீசும் காற்று, கார்பன் எச்சங்களாகி, ஓசோன் அணுக்களின் அடர்த்தியைக் குறைத்துவிடுகிறது. இதனால் சூரிய புற ஊதாக் கதிர்களின் தாக்கம் அதிகரித்து, புவி வெப்பமடைந்துகொண்டே இருக்கிறது. அதன் காரணமாகவே மழைப்பொழிவு குறைந்துபோய், விவசாயம் முழுமையாகப் பாதிக்கப்பட்டு, இப்பூமியே உயிரற்ற கிரகமாக மாறிக்கொண்டிருக்கிறது. எனவே, விவசாயம் காக்கப்பட வேண்டும். அதற்காக இந்தியா சார்பில் ஓசோன் பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு