இந்தியா ஏழை நாடு என்று எப்படிச் சொல்ல முடியும்? இந்தியாவின் பிரதமர் அணிந்த சூட் விலை ரூ.10 லட்சம் செலவில் தயார் ஆகிறது. அதனை ரூ.4 கோடிக்கு ஒருவர் ஏலம் எடுக்கிறார். ஆட்சிக்கு வந்து ஓர் ஆண்டுகூட ஆகவில்லை. அதற்குள் இப்படி ஒரு காஸ்ட்லியான சர்ச்சை. இதுவரை எந்தப் பிரதமரும் இப்படிக் காட்டிக்கொண்டது இல்லை!

அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்தித்தபோது இந்திய பிரதமர் மோடி அணிந்த சூட் விலை வெளியில் வந்தபோது அப்பாவிகள் அதிர்ச்சி அடைந்தார்கள். ஒவ்வொரு கூட்டத்துக்கும் விதவிதமான ஆடைகளை மோடி அணிந்து வருவார். டிரஸ் ஹாபி அவருக்கு இருக்கிறது என்று நினைத்து சமாதானம் சொல்லிக்கொண்டார்கள் சிலர். ஆனால் ஒபாமாவை சந்தித்தபோது அணிந்த சூட் ரூ.10 லட்சம் மதிப்பிலானது என்று தெரிந்தபோது விக்கித்துப் போனார்கள். அதன் அடுத்த கட்டம், இன்னும் அதிர்ச்சி. இந்த ஆடையை பற்றி காங்கிரஸ் வெளிப்படையாக கேள்விகள் வைத்தது. ஊடகங்கள் கிண்டல் அடித்தன. உடனே ஒரு ஐடியா செய்தார்கள். 'இந்த சூட் ஏலம் விடப்பட்டு, அந்தத் தொகை சேவைக்குப் பயன்படுத்தப்படும்’ என்றார்கள். பணம் எப்படி வந்தால் என்ன? சமூக சேவைக்கு செலவு செய்தால் விமர்சனங்களை அடக்கிவிடலாம் என்று நினைத்தார்கள். இந்த விவகாரத்தில், காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் அஜய் மக்கான் எழுப்பிய சட்டப் பிரச்னை முக்கியமானது. ''வெளியுறவுத் துறை விதிகள் மற்றும் அமைச்சர்களின் நடத்தை விதிமுறைகளின்படி வெளிநாடுகளில் 5,000 ரூபாய்க்கும் குறைவான மதிப்புள்ள பரிசுப்பொருட்களைத் தான் அமைச்சராக இருக்கும் ஒருவர், தன் உபயோகத்துக்கு வைத்துக்கொள்ளலாம். அதைவிட அதிகமான மதிப்புள்ள எந்தப் பரிசுப் பொருட்களாக இருந்தாலும் அதை அமைச்சர்கள் அரசிடம் ஒப்படைக்கவேண்டும்'' என்றார்.

பிரதமர் மோடி அணிந்த சூட், திறந்த ஜீப் ஒன்றில் வைக்கப்பட்டு குஜராத் மாநிலம் கொடல்வாடி பகுதியின் பிரதான சாலைகளில் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டது. தர்மநந்தன் வைர கம்பெனியில் பணியாற்றும் தொழிலாளர்கள் உட்பட நூற்றுக்கணக்கான மக்கள் அந்த ஊர்வலத்தில் கலந்துகொண்டு, 'மோடி’, 'மோடி’ என்று கோஷமிட்டனர். அந்த வைரக் கம்பெனியை அடைந்தவுடன் அந்த ஆடையின் மீது பூக்களைத் தூவினர். அனைவருக்கும் இனிப்பு வழங்கினர்.

ஜனாதிபதி மாளிகை, பிரதமர் அலுவலகம், ராஜ்பவன் போன்ற இடங்களில் விலையுயர்ந்த பொருட்கள் வைக்கப்படும் பொக்கிஷ அரங்குகள் உண்டு. பிரதமர் மோடி தனக்கு வந்த இந்த பரிசுப்பொருட்களை இங்குதான் ஒப்படைக்கவேண்டும். அப்படி ஒப்படைக்கவில்லை. ஆனால் பிரச்னை வந்தவுடன் அது ஏலம் விடப்படுகிறது என்பது காங்கிரஸ் குற்றச்சாட்டு. ஆனால் பி.ஜே.பி, இது தவறான குற்றச்சாட்டு என்கிறது. ''மோடி, முதல்வராக இருந்த சமயத்தில்கூட தனக்கு வந்த பரிசுப்பொருட்களை விற்று அதைப் பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவியுள்ளார். அதேபோன்று இப்போதும் கடந்த ஒன்பது மாதங்களாகக் கிடைத்த பரிசுப்பொருட்களைப் பொது ஏலத்துக்குவிட்டு பொதுமக்களுக்குப் பயன்படச் செய்கிறார்' என்கிறது.

விலையுயர்ந்த கம்பளியால் ஆன அந்த சூட்டில், நரேந்திர தாமோதர தாஸ் மோடி என்ற கோல்டன் வரிகள் இருந்தன. குஜராத் டெய்லர் தயாரித்த இந்த சூட்டின் செலவும் அதற்குரிய வேலை நாட்களும் அதிகம். இந்த சூட்டுக்கான விலை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. சமூக வலைதளங்களில்தான் ரூ.10 லட்சம் என்று செய்திகள் பரவின. பின்னர் அந்த சூட், அதே ரூ.10 லட்சம் என அதிகாரபூர்வமாக நிர்ணயிக்கப்பட்டு பொது ஏலத்துக்கு வந்தது. குஜராத்தைச் சேர்ந்த வைர வியாபாரி தர்மநந்தா லால்ஜி படேல் என்பவர் 4,31,31,311 ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளார். இந்த சூட்டை மோடிக்குப் பரிசளித்தவர் அவரது நண்பரான ரமேஷ் குமார் பைக்பாய். ஹாங்காங்கில் இருக்கும் குஜராத்தைச் சேர்ந்த தொழில் அதிபரான ரமேஷ் குமார் பைக்பாய், ''என்னுடைய மகனின் திருமணத்துக்கு அழைப்பு விடுத்தபோது இந்த ஆடையை மோடிக்கு பரிசளித்தேன். ஆனால் திட்டமிட்டபடி மோடியால் என் வீட்டுத் திருமணத்துக்கு வர முடியவில்லை. அந்த ஆடையைத்தான் பிரதமர் மோடி ஒபாமாவுடனான பேச்சுவார்த்தையின்போது அணிந்திருந்தார்' என்று சொன்னார்.

ஃபிரெண்டு... ஃபிரெண்டு!

சரோஜ் கண்பத்