இது மதுரை அ.தி.மு.க கலாட்டா!

''கட்சிக்காக உழைச்சவங்களை எல்லாம் ஓரங்கட்டிட்டு, குருட்டு அதிர்ஷ்டத்துல பதவிக்கு வந்தவங்கதான், செல்லூர் ராஜுவும் முத்துராமலிங்கமும். பெரிய பதவிக்கு வந்த பிறகாவது தங்களோட தவறான நடவடிக்கைகளை மாத்திக்கணும் இல்லையா? ஆனா, இந்த ரெண்டு பேரும் இன்னும் தரை டிக்கெட் ரேஞ்சுக்குத்தான் நடந்துக்கிறாங்க' என்று புலம்புகிறார்கள் மதுரை மாவட்ட அ.தி.மு.கவினர்.

அ.தி.மு.க-வின் மதுரை மாநகரச் செயலாளரும் அமைச்சருமான செல்லூர் ராஜு, மதுரை புறநகர் மாவட்டச் செயலாளரும் எம்.எல்.ஏவுமான முத்துராமலிங்கம் ஆகிய இருவரின் நடவடிக்கைகளைப் பொறுத்துக் கொண்டிருந்த அ.தி.மு.கவினர் இப்போது பதிலுக்குப் பதில் என்று இறங்கிவிட்டனர்.

நம்மிடம் பேசிய அ.தி.மு.கவினர், ''அமைச்சர் பொறுப்புல இருக்கிறவருக்குப் பொது இடத்துல எப்படி பேசுறதுன்னே தெரியலை. ஒருமுறை மகளிர் அணி கூட்டத்தில் பேசினப்போ, 'குளிச்சிட்டு சுத்த பத்தமா வந்திருக்கீங்களா? 'உங்களுக்கு விசிலடிக்கத் தெரியுமா?’... இப்படி எல்லாம் செல்லூர் பேசினாரு. துணை மேயரா இருந்த கோபாலகிருஷ்ணன், எம்.பி வேட்பாளரா போட்டியிட்டப்போ, 'அமைதிப்படை’ அமாவாசை மாதிரி அரசியல்ல வளர்ந்து வர்றாரு’ன்னு செல்லூர் கிண்டல் செஞ்சாரு. கோபாலகிருஷ்ணன் அதைப் பெருசா எடுத்துக்கலை.

தன்னோட அதிகாரத்தை மாநகராட்சி நிர்வாகத்துக்குள்ள நுழைக்க ஆரம்பிச்சதால, மேயர்லருந்து கவுன்சிலர் வரைக்கும் செல்லூர் மேல கோபமாக இருக்காங்க. டிராஃபிக்கை குறைக்கிறதுக்கு வைகை ஆத்துல 30 கோடி ரூபாய் செலவுல பாலம் கட்ட மேயர் அனுமதி வாங்கினாரு. இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி போன 16-ம் தேதி நடக்குறதா இருந்துச்சு. அந்த நிகழ்ச்சிக்கு அமைச்சர் வரமுடியாதுன்னு சொல்லிட்டாரு. அதனால, அமைச்சர் இல்லாம விழாவை நடத்த கமிஷனர் முடிவு செஞ்சாரு. நான் இல்லாம மதுரையில எந்த விழாவும் நடக்கக் கூடாதுன்னு அமைச்சர் சொல்லிட்டாரு. அதனால், அந்தத் திட்டத்தை உடனே தொடங்க முடியாமப் போச்சு. மகள் ரம்யாவையும் மருமகனையும் கட்சிக்குள்ளே நுழைச்சு பல கலாட்டாக்களைச் செய்யிறாரு' என்று செல்லூர் ராஜுக்கு எதிராக அனல் கக்கினார்கள்.

இன்னொரு புறம், புறநகர் மாவட்டச் செயலாளரான முத்துராமலிங்கத்தின் நடவடிக்கைகள் குறித்தும் அ.தி.மு.கவினர் அங்கலாய்க்கிறார்கள்.

''எல்லா ஒன்றியத்துலேயும் கட்சிக்காரங்களோட முத்துராமலிங்கத்துக்கு பிரச்னைதான். மக்கள்கிட்டயும் அவருக்கு மரியாதை இல்லை. கள்ளிக்குடி பக்கத்துல விவசாய நிலங்களை தரிசுநிலம்னு பொய் சொல்லி சிப்காட் கொண்டு வர்றதுக்கு தி.மு.க ஆட்சியில ஜரூரா வேலை நடந்துச்சு. அந்தப் பகுதி விவசாயிங்க போராடி அதைத் தடுத்து நிறுத்தினாங்க. அதனாலதான் அ.தி.மு.கவுக்கு ஓட்டுப் போட்டாங்க. ஆனா, இப்போ இவரும் விவசாயிகளுக்கு எதிராக செயல்படுறதால இவருக்கு எதிராவும் மக்கள் போராட்டம் நடத்துறாங்க.

கடந்த 14-ம் தேதி மதுரையில விளையாட்டுப் போட்டி தொடக்க விழா நடந்துச்சு. விளையாட்டுத் துறை அமைச்சர் சுந்தர்ராஜன், அமைச்சர் செல்லூர் ராஜு, கலெக்டர் எல்லோரும் வந்திருந்தாங்க. அந்த நிகழ்ச்சிக்கு ரொம்ப லேட்டா வந்த முத்துராமலிங்கம், 'அழைப்பிதழில் மாவட்டச் செயலாளர் பேர் போடாம என்னய்யா விழா நடத்துறீங்க?’ன்னு நாகரிகம் இல்லாம பேசுனாரு. கலெக்டர் எவ்வளவோ சமாதானப்படுத்தியும் அவர் அமைதி ஆகல. கடந்த 21-ம் தேதி அம்மா அறிவிச்ச பாரம்பர்ய விளையாட்டுப் போட்டிக்கு இவர் பெயரை முதல்ல போட்டாங்க. அந்த நிகழ்ச்சிக்கு இரண்டு அமைச்சர்கள் வந்திருந்தும் இவர் வரலை'' என்று கொந்தளித்தார்கள் நம்மிடம் பேசிய அ.தி.மு.கவினர்.

இந்தப் புகார்கள் பற்றி முத்துராமலிங்கத்திடம் நாம் கேட்டதற்கு, 'அதெல்லாம் ஒண்ணுமில்லை. அன்றைக்கு சொந்த ஊர் கோயில் விழாவுக்கு வந்துட்டேன். அதான், பாரம்பர்ய விளையாட்டு நிகழ்ச்சியில கலந்துக்க முடியல. மத்தபடி எதையுமே நான் மனசுல வெச்சுக்கலை. அம்மாவையும்

அ.தி.மு.கவையும் தவிர வேற எதுவும் எனக்கு தெரியாது'' என்றார்.

அமைச்சர் செல்லூர் ராஜுவோ, ''தம்பி... விளையாட்டுப் போட்டியைப் பற்றி மட்டும் நல்லபடியாக எழுதுங்க. வேற எந்தப் பிரச்னையும் பார்க்காதீங்க' என்று 'அருள்வாக்கு’ சொல்வது மாதிரிச் சொல்லி முடித்துக்கொண்டார்.

ஆனால் மதுரை அ.தி.மு.கவினர், இவர்கள் இருவருக்கும் எதிராக குமுறிக் கொண்டிருக்கிறார்கள்!

- செ.சல்மான், படங்கள்: ஈ.ஜெ.நந்தகுமார்