கல்லூரிப் பேராசிரியர்கள் மறியல் போராட்டம்!

பேராசிரியர்களை கல்லூரிகளை விட்டு சாலைக்கு இழுத்து வந்திருக்கிறார்கள் ஆட்சியாளர்கள்.

''அரசு உதவிபெறும் கல்லூரிகளில் காலியாக உள்ள 1,876 பணியிடங்களை நிரப்ப வேண்டும், தனியார் கல்லூரிகளில் பணியாற்றும் உதவிப் பேராசிரியர்களுக்கு யு.ஜி.சி விதிப்படி ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, கடந்த இரண்டு ஆண்டுகளாகப் போராடுகிறோம். அதை அரசாங்கம் கண்டுகொள்ளவே இல்லை. எங்களை சமாதானம் செய்வதற்காக அதிகாரிகள் போடும் இரட்டை வேடத்தை நம்பி மோசம் போனதுதான் மிச்சம். ஆகவே, வேறு வழியில்லாமல் மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்தோம்' என்கிறார், கூட்டு நடவடிக்கைக் குழுவின் அமைப்பாளர் ரவிச்சந்திரன்.

தங்கள் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காத அ.தி.மு.க அரசை கண்டித்து, 'மூட்டா’ உள்ளிட்ட கல்லூரி ஆசிரியர்கள் சங்கங்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர் சங்கங்கள் மறியல் போராட்டத்தில் குதித்து இருக்கிறார்கள்.

'எங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால், 8,000-க்கும் அதிகமான உதவிப் பேராசிரியர்கள் பணி மேம்பாடு கிடைக்காமல் தவித்து வருகிறோம். தமிழகத்தில் 2006-க்குப் பிறகு அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பணியில் சேர்ந்தவர்களுக்கு 2010-ல் முறையான பணி மேம்பாடு கிடைத்திருக்க வேண்டும். ஆனால் கிடைக்கவில்லை. 2014-ம் ஆண்டிலும் பணி மேம்பாடு எதிர்பார்த்து காத்து இருந்தவர்களுக்கும் ஏமாற்றமே மிஞ்சியது. காலிப்பணியிடங்கள் நீண்டகாலமாக நிரப்பப்படவில்லை. அதை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று கோருகிறோம்.

தனியார் கல்லூரிகளில் பணிபுரியும் உதவிப் பேராசிரியர்களுக்கு சொற்ப ஊதியமே வழங்கப்படுகிறது. அவர்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழு விதிப்படி குறைந்தபட்ச சம்பளமாக ரூ.25,000 வழங்க வேண்டும். தமிழகத்தில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் கட்டணங்களை முறைப்படுத்த நீதிமன்றம் கூறிய கட்டண நிர்ணயக் குழுவை நியமிக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில அளவில் மறியல் போரட்டத்தை நடத்துகிறோம்' என்று விரிவாகச் சொன்னார் ரவிச்சந்திரன்.

அரசு உதவிபெறும் கல்லூரிகளில் ஆயிரக்க ணக்கான காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதற்கான காரணத்தைத் தெரிவித்தார் மூட்டா அமைப்பின் பொதுச்செயலாளர் சுப்புராஜு. 'அரசு உதவிபெறும் கல்லூரிகளில் இருந்த பேராசிரியர் பற்றாக்குறையைப் போக்க 3,120 புதிய காலி பணியிடங்கள் உருவாக்கப்பட்டு நிரப்பப்படும் என்று 2012-ம் ஆண்டு சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அறிவித்தார் அன்றைய முதல்வர் ஜெயலலிதா. அது அரசாணையாகவும் வெளிவந்து இரண்டரை ஆண்டுகள் கடந்துவிட்டன. இன்னும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. அதற்கு, கல்லூரி கல்வி இயக்குநர் தேவதாஸ் மற்றும் உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் ஆகிய இருவருமே காரணம். ஆரம்பத்தில், சில கல்லூரிகளில் மட்டும் பணியிடங்கள் நிரப்பப்பட்டன. அப்போது, கல்வித் துறை அதிகாரிகள், அமைச்சர் பழனியப்பன் மற்றும் சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகம் என அனைவரும் பணியிடங்களை நிரப்புவதில் முறைகேடுகளில் ஈடுபட்டதாகப் புகார் சொல்லப்பட்டது. அந்தச் சமயம் 1,244 பணியிடங்கள் நிரப்பப்பட்டிருந்தன. அவற்றில், பெரும்பாலானவை பல்கலைக்கழக விதிமுறைகளை மீறிய நியமனங்கள். இந்தப் புகார்களுக்குக் கல்வித் துறை தரப்பிலோ, அமைச்சர் தரப்பிலோ இதுவரை மறுப்பு ஏதும் வந்ததாக தெரியவில்லை.

இந்த சர்ச்சைகளுக்குப் பிறகு பணி நியமனங்கள் நடக்கவே இல்லை. இன்னும், 1,876 பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன. இதுகுறித்து, சட்டசபையில் கேள்வி எழுப்பியபோதெல்லாம் ஆட்சியாளர்கள் பல்வேறு காரணங்களைச் சொல்லி விவகாரத்தை இழுத்தடித்தனர். உதவிப் பேராசிரியர் பணிக்கு பல லட்சம் ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. 1,876 பணியிடங்களையும் வெளிப்படையான, நேர்மையான முறையில் நிரப்ப வேண்டும். இயக்குநர் தேவதாஸை பதவியிலிருந்து நீக்க வேண்டும்' என்றார் காட்டமாக.

உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பனிடம் பேசினோம். ''அப்படியா... போராட்டமா, எப்ப பண்றாங்க' என்று கேட்டவர், ''பணி நியமனங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. என் மீது பழி போடவே இதுபோன்ற அவதூறுகளைச் சொல்கிறார்கள். தடாலடியாக பணி நியமனங்களைச் செய்துவிட முடியாது. இதில் பல சிக்கல்கள் இருக்கின்றன. உங்களிடம் புகார் சொல்லும் பேராசிரியர் சங்கங்கள் என்னை இதுவரை நேரில் வந்து பார்த்ததுகூட இல்லை. நான் எதற்குமே இடைஞ்சலாக இருந்ததில்லை. என்னை வந்து நேரில் சந்தித்தால் அவர்களுடைய பிரச்னைகளைத் தீர்த்து வைக்கிறேன்' என்று சொன்னார்.

பேராசிரியர்களின் மறியல் குறித்து உயர்கல்வித் துறை செயலாளர் அபூர்வா, ''அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னைகளைச் சுமுகமாக தீர்ப்பதற்கான முழு முயற்சிகள் எடுக்கப்படும்'' என்றார்.

அடுத்த தலைமுறைகளை உருவாக்கும் பேராசிரியர்கள் விஷயத்தில் அலட்சியம் காட்டலாமா?

- நா.இள.அறவாழி, படங்கள்: எல்.ராஜேந்திரன்