Published:Updated:

கிரானைட் முறைகேடு: ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் வீடுகள் உள்ளிட்ட 34 இடங்களில் சோதனை!

கிரானைட் முறைகேடு: ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் வீடுகள் உள்ளிட்ட 34 இடங்களில்  சோதனை!
கிரானைட் முறைகேடு: ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் வீடுகள் உள்ளிட்ட 34 இடங்களில் சோதனை!
கிரானைட் முறைகேடு: ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் வீடுகள் உள்ளிட்ட 34 இடங்களில்  சோதனை!

மதுரை: கிரானைட் குவாரிகளில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக  ஐ.ஏ.எஸ்.  அதிகாரிகள் வீடுகள் உள்ளிட்ட 34 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

மதுரை அண்ணாநகரில் உள்ள கிரானைட் அதிபர் பி.ஆர்.பழனிச்சாமி மற்றும் அவரது  மருமகன் மகாராஜன் ஆகியோரது  வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறை ஏ.டி.எஸ்.பி.  சண்முகப்பிரியா தலைமையில் 6 பேர் கொண்ட குழு இன்று காலை 6.30 மணி முதல்  அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

சோதனையின்போது வெளிநபர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. வீட்டில்  உள்ள ஆவணங்கள் மற்றும் ரொக்கப்பணம், தங்க நகைகள் அனைத்தையும் அதிகாரிகள்  கணக்கெடுத்து வருகிறார்கள். மேலும் மதுரை லேக் ஏரியாவில் உள்ள  பி.ஆர்.பழனிச்சாமியின் உறவினர் தெய்வேந்திரன் வீட்டிலும் சோதனை நடந்தது.

இதுதவிர கே.கே.நகரில் உள்ள சிந்து கிரானைட் அதிபர் செல்வராஜ், ஜி.ஜி. கிரானைட்  அதிபர் கோபால கிருஷ்ணன், மதுரா கிரானைட் அதிபர்கள் பன்னீர்முகமது, ரபீக்ராஜா,  அன்வர்அலி, நாகூர்கனி ஆகியோரது வீடுகளிலும் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்பு  போலீசார்அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

மேலூர் அழகர்கோவில் ரோட்டில் உள்ள கிராம அதிகாரி செல்வராஜ் வீட்டிலும் லஞ்ச  ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள். மதுரையில் 18 இடங்களில்  நடத்தப்பட்டு வரும் சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் மற்றும் கணக்கில் வராத  ரொக்கப்பணம், நகைகள் கைப்பற்றப்பட்டு உள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலூரில் வணிக வரித்துறையில் உதவி கமிஷனராக இருந்து ஓய்வு பெற்ற பெரியசாமி  தற்போது விருதுநகர் புல்லலக்கோட்டை பாரதி நகரில் வசித்து வருகிறார்.அவரது  வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

##~~##
இது தவிர மதுரை மாவட்ட முன்னாள் கலெக்டர்கள் காமராஜ், மதிவாணன் சுரங்க  துணை இயக்குனர் ராஜாராம் ஆகியோர் வீடுகளிலும் சோதனை நடந்தது. மதுரை தவிர  சென்னை, கோவை, தூத்துக்குடி திருச்சி, கரூர் ,கன்னியாகுமரி, ராமநாதபுரம் உள்பட  34 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினார்கள்.
பரமக்குடி உதவி செயற் பொறியாளர் ராமச்சந்திரன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர்  சோதனை நடத்த சென்றபோது வீடு பூட்டப்பட்டு இருந்தது. இதையடுத்து  லஞ்ச ஒழிப்பு  துறையினர் ராமச்சந்திரனை செல்போனில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர்.
வெளியூரில் உள்ள ராமச்சந்திரன் உடனடியாக பரமக்குடிக்கு வருவதாக   தெரிவித்தார்.  இதையடுத்து அவரது வீட்டில் இன்று மாலை சோதனை நடக்கலாம் என  எதிர்பார்க்கப்படுகிறது.
சோதனை முடிவடைந்ததும், கிரானைட் முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள்,தொழில்  அதிபர்கள் மீது தனித்தனியாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு,அவர்கள் கைது  செய்யப்படுவார்கள் எனத் தெரிகிறது.