Published:Updated:

’தியாகுவின் தந்திரம்!’

’தியாகுவின் தந்திரம்!’

தாமரையின் குடும்ப விவகாரம் பற்றி, 'தியாகு வாழ்க்கையை விசாரணை செய்ய வேண்டும்!’ என்ற தலைப்பில் கடந்த இதழில் கட்டுரை ஒன்றை வெளியிட்டு இருந்தோம். அதில் தாமரை, தியாகு இருவரது கருத்துகளையும் பதிவு செய்திருந்தோம்.

’தியாகுவின் தந்திரம்!’

தற்போது கவிஞர் தாமரை நமக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறார். அதில், ''ஜூனியர் விகடனில் வெளிவந்துள்ள கட்டுரையில் தியாகு சொல்லியிருக்கும் விஷயங்கள் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்டன. நான் 1994-ல் தியாகுவை முதல்முறையாகச் சந்தித்த அன்றிலிருந்து 2012-ல் அவர் வீட்டைவிட்டு ஓடியது வரை அவரிடம் நான் ஒரு பொய்கூடச் சொன்னதில்லை என்றால் நம்புவீர்களா? ஒரு நிகழ்வையும் மாற்றி திரித்துச் சொன்னதில்லை. ஓரிடத்துக்குப் போகிறேன் என்று சொல்லிவிட்டு இன்னோர் இடத்துக்குப் போனதில்லை. என்னை மாதிரி ஒரு (முட்டாள்) மனைவி இருக்க முடியாது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஒரு கடவுளைப்போல எங்களால் (நான், குடும்பத்தினர், முன்னாள் இயக்கம், பள்ளித் தரப்பு) நடத்தப்பட்டவர். பல ஆண்டுகளாக அரசல்புரசலாகத் தெரிந்திருந்தாலும் 2012-ல் ஆதாரங்களோடு தியாகு ஒரு போலி என்று தெரியவந்த பிறகுதான் நிலைமை அடியோடு மாறியது. பக்தர்களாக இருந்தவர்களெல்லாம் பதறி ஓடினார்கள். நானோ எந்தப் பக்கமும் போக வழியில்லாத கூண்டுக் கிளிபோல சிக்கிக் கொண்டேன்.

எனக்கு நன்றாகத் தெரியும், பொதுவெளியில் வந்து தியாகு மீது நான் வைக்கும் உண்மைக் குற்றச்சாட்டுகளும், தியாகு என்மீது சுமத்தும் பொய்க் குற்றச்சாட்டுகளும் மக்​களின் பார்வையில் ஒரே தராசில்தான் நிறுத்​தப்படும் என்று! இதற்கு அஞ்சித்தான் நான் கடந்த மூன்று ஆண்டுகளாக மெளன​மாக இருந்தேன்.

’தியாகுவின் தந்திரம்!’

ஆனால், இப்​போது துணிந்து வெளிவந்ததன் காரணம் என்னிடம் இருக்கும் உண்​மையும் அறமும் ஒழுக்கமும்தான். இவற்றை நம்பித்தான் களம் இறங்கியிருக்கிறேன்! தியாகு எழுதிய கடிதங்கள் அவரது சொந்தப் புத்தியுடன், அவராலேயே முன்வந்து எழுதப்பட்டவை. ஒவ்வொரு முறையும் தவறு செய்து கையும் களவுமாக அவர் பிடிபடும் போதெல்லாம் என்னை வாய்வார்த்தையாக முதலில் சமாதானப்படுத்துவார். இவருக்கு பொய் கைவந்த கலை என்று தெரிந்துவிட்ட பிறகு நான் எதையுமே நம்ப மறுத்துவிட்டேன். உடனே, 'இதோ பார், எழுதி வேண்டுமானாலும் கொடுத்து விடுகிறேன். இதை வைத்து நீ என்ன தண்டனை வேண்டுமானாலும் தரலாம்’ என்று எழுதிக் கொடுத்து விடுவார். அப்போதைக்கு நான் வேறு நடவடிக்கை எடுக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக அவர் செய்து வந்த தந்திரம் இது!

கேவலம், மகா கேவலம், ஒரு பெண் இவரை மிரட்டினாராம், பணிந்துபோய் அவள் கேட்டபடியெல்லாம் எழுதிக் கொடுத்துவிட்​டாராம். அதற்கு 'சமரன், தூக்குக் கயிறு’ என்ற பயங்கர வாதங்கள் வேறு! இவரெல்லாம் ஒரு 'புரட்சிக்காரர்’ என்று இன்னுமா இந்த ஊர் நம்புகிறது? விசாரனையில் எல்லாம் வெளிப்படும் என்று நம்புகிறேன்!'' என்று குறிப்பிட்டுள்ளார்.