Published:Updated:

ஜெயலலிதா இல்லம் விவகாரம்! தீபா வழக்கில் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

ஜெயலலிதா இல்லம் விவகாரம்! தீபா வழக்கில் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
ஜெயலலிதா இல்லம் விவகாரம்! தீபா வழக்கில் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை நினைவிடமாக்க எதிர்ப்பு தெரிவித்து தீபா தொடர்ந்த வழக்கில் பதில் அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லம் நினைவிடமாக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கடந்த ஆகஸ்ட் மாதம் 17-ம் தேதி அறிவித்தார். அவரது அறிவிப்பைத் தொடர்ந்து, பொதுப்பணித்துறை அதிகாரிகள் பணியைத்தொடங்கினர். இந்த நிலையில், போயஸ் கார்டன் இல்லத்தை நினைவிடமாக்குவதை எதிர்த்து, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அந்த வழக்கில் ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவிடமாக்கும் முயற்சிக்குத் தடை விதிக்குமாறு தீபா கோரியுள்ளார். மேலும், போயஸ் தோட்டத்துச் சொத்து அவருக்கும் அவரது சகோதரர் தீபக் ஆகிய இருவருக்கும் மட்டுமே சொந்தமாகும் என்றும், தனியார் சொத்தில் அனுமதி இல்லாமல் எந்தவொரு அனுமதியையும் மேற்கொள்ள அரசு அதிகாரிகளுக்கு அதிகாரமில்லை என்றும் கூறியிருந்தார்.

இந்த உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனு தொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர், பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, சுற்றுலாத்துறை ஆகியோர் வருகிற 23-ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.