Published:Updated:

மு.க.ஸ்டாலினுக்கு நன்றி சொன்ன பினராயி விஜயன்

மு.க.ஸ்டாலினுக்கு நன்றி சொன்ன பினராயி விஜயன்
மு.க.ஸ்டாலினுக்கு நன்றி சொன்ன பினராயி விஜயன்

கேரளாவில் அனைத்து சாதியைச் சார்ந்தவர்களையும் அர்ச்சகராக நியமித்ததற்கு தனக்கு வாழ்த்து தெரிவித்த மு.க.ஸ்டாலினுக்கு அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் நன்றி தெரிவித்துள்ளார்.

மு.க.ஸ்டாலினுக்கு நன்றி சொன்ன பினராயி விஜயன்


கேரள மாநிலத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் திருவிதாங்கூர் தேவசம்போர்டில் பிற சமூகத்தைச் சேர்ந்தவர்களை அம்மாநில அரசு அர்ச்சகர்களாக நியமித்தது. கேரள அரசின் இந்தச் செயலுக்குப் பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகள் தெரிவித்தனர். கேரள அரசின் இந்தச் செயலுக்கு தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருந்தார். இந்தநிலையில் இதற்கு நன்றி தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்ட பினராயி விஜயன், 'மு.க.ஸ்டாலினுக்கு நன்றி. இதற்கான பெருமை சமூக நீதிக்காக போராடிய அனைத்து இயக்கங்களுக்கும் பொருந்தும்' என்று குறிப்பிட்டுள்ளார்.