Published:Updated:

''டெங்குவைப் பற்றி ஆட்சியாளர்களுக்குத் துளிகூட கவலையில்லை!'' - மு.க.ஸ்டாலின்

''டெங்குவைப் பற்றி ஆட்சியாளர்களுக்குத் துளிகூட கவலையில்லை!'' - மு.க.ஸ்டாலின்
''டெங்குவைப் பற்றி ஆட்சியாளர்களுக்குத் துளிகூட கவலையில்லை!'' - மு.க.ஸ்டாலின்

''டெங்குவைப் பற்றி ஆட்சியாளர்களுக்குத் துளிகூட கவலையில்லை!'' - மு.க.ஸ்டாலின்

''டெங்குவைப் பற்றி ஆட்சியாளர்களுக்குத் துளிகூட கவலையில்லை'' என்று தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நிருபர்களைச் சந்தித்த மு.க.ஸ்டாலின், அவர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதில் அளித்தார். அப்போது, டெங்கு குறித்து சில கேள்விகளைக் கேட்டனர்.  ''டெங்குப் பிரச்னையில் அமைச்சர் விஜயபாஸ்கர் நடவடிக்கை எடுக்காததற்குக் காரணம் என்ன'' என்ற கேள்விக்குப் பதிலளித்த மு.க.ஸ்டாலின், ''இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதில் எல்லாம் அவர்கள் அக்கறை செலுத்துவது இல்லை. அவர்களுடைய அக்கறை எல்லாம் ஏற்கெனவே ஆர்.கே.நகர் தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா விவகாரத்தில் வருமானவரித் துறையிடமிருந்து எப்படித் தப்பித்துக்கொள்வது, குட்கா ஊழல் புகாரிலிருந்து எப்படித் தப்பித்துக்கொள்வது என்பதில்தான் கவனம் செலுத்திக்கொண்டிருக்கிறார்கள். அதையும் தாண்டி, மைனாரிட்டியாக இருக்கும் இந்த ஆட்சியை எப்படி நிலைநிறுத்திக்கொள்வது என்பதில் அக்கறையுடன் உள்ளார்கள்'' என்றார்.

''டெங்குவால் நாள் ஒன்றுக்கு 10-க்கும் மேற்பட்டோர் இறந்துகொண்டிருக்கும் சூழலில், சுகாதாரத்தைக்கூட தமிழக அரசால் சரிவர செயல்படுத்த முடியவில்லையே'' என்கிற மற்றொரு கேள்விக்கு, ''இதைப் பற்றி எல்லாம் அவர்களுக்குத் துளிகூடக் கவலையில்லை. அதனால்தான் நான் நேற்றுகூட, ‘இந்த ஆட்சியே ஒரு டெங்கு ஆட்சிதான்’ என்று குறிப்பிட்டுச் சொன்னேன்'' என்றார். ''டெங்கு பாதிப்பு அதிகமாக இருக்கும் சூழலில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்ளும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாக்களில், போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்படுகிறதே'' என்கிற மற்றொரு கேள்விக்குப் பதிலளித்த அவர், ''இந்த விழா தேவையில்லாதது என நான் சொன்னால் ஏதோ அரசியல் காழ்ப்பு உணர்ச்சியோடு சொல்கிறேன் என்பார்கள். நான் எம்.ஜி.ஆரின் புகழுக்குக் களங்கம் கற்பிக்கிறேன் எனச் சொல்வார்கள். அதற்கு நான் பதில் சொல்லத் தயாராக இல்லை. இருந்தாலும், அதிலே காட்டும் அக்கறையை டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த, அதனால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்கும் நடவடிக்கைகளில் காட்ட வேண்டும்'' என்றார். 

அடுத்த கட்டுரைக்கு