Published:Updated:

வட்டியோடு வழங்குவேன் முத்தங்கள்!

கவிதை வரும்!

பிரீமியம் ஸ்டோரி

கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளந்தான்

கள்வெறி கொள்ளுதையா...

தந்தையின் முத்தத்தினால் மனம்தான்

தலைவர் பதவியை நாடுதையா...

முதல்வர் பதவி எனக்குத் தந்தால்

முத்தங்கள் பல தருவேன் வட்டியாக உமக்கு!

- ஸ்ரீராம்

வட்டியோடு வழங்குவேன் முத்தங்கள்!

உனக்கு மட்டும் உனக்கு மட்டும்

ரகசியம் சொல்வேன்

அந்த ரகசியத்தை

அழகிரிக்குச் சொல்லிவிடாதே!

- விமல்

அண்ணா இல்லை

அண்ணனும் இல்லை

ஆசை இல்லை

என்று

அறிவித்துவிட்டேன்...

இன்னுமா உனக்கு

நம்பிக்கை இல்லை?

- ஏ.அஜிதா

செவியில் சொல்வதை

புவியில் சொல்லக் கூடாதா

நீதான் தலைவர் என்று!

- சி.ஜெயக்குமரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு