Published:Updated:

முழு அடைப்பு போராட்டத்திற்கு திமுக ஆதரவு!

முழு அடைப்பு போராட்டத்திற்கு திமுக ஆதரவு!
முழு அடைப்பு போராட்டத்திற்கு திமுக ஆதரவு!
முழு அடைப்பு போராட்டத்திற்கு திமுக ஆதரவு!

சென்னை: ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்து மம்தா விலகியுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் நாளை நடத்தும் போராட்டத்திற்கு திமுக தலைவர் கருணாநிதி திடீர் ஆதரவு தெரிவித்துள்ளது மட்டுமல்லாமல், முழு அடைப்பு போராட்டத்தை வெற்றிபெற செய்யவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,"பேருந்து கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு போன்றவற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள ஏழை,எளிய மக்கள்,விவசாயிகள்,விவசாயத் தொழிலாளர்கள்,வணிகர்கள் என்று அனைத்துத்தரப்பினர் மீது மேலும் பளுவினை சுமத்துகின்ற வகையில் மத்திய அரசு டீசல் விலை உயர்வு, சமையல் எரிவாயுவுக்கான உச்சவரம்பு மற்றும் சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டிற்கான அனுமதி போன்றவைகளை அடுத்தடுத்து அறிவிப்பு செய்திருப்பதை கண்டித்து நாடு தழுவிய அளவில் 20-ம்தேதி அன்று பொது வேலைநிறுத்தம் நடத்த அறிவித்துள்ளன.

வெற்றிகரமாக நடத்தவேண்டும்

##~~##
இந்த அறிவிப்பையொட்டி திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் தொ.மு.ச. பேரவையின் அனைத்து இணைப்பு சங்கங்களும்,இந்த வேலை நிறுத்த முழு அடைப்பிலே கலந்துகொண்டு,அவற்றை வெற்றிகரமாகவும் அமைதியாகவும் நடத்துவதற்கான முழு ஒத்துழைப்பையும் அளிக்கவேண்டுமென்று அறிவிப்பதோடு, கழகத்தின் பல்வேறு அமைப்புகளும் இதற்கான ஏற்பாடுகளில் பங்கேற்க வேண்டுமென்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என்று கூறியுள்ளார்.