Published:Updated:

தூதரக முற்றுகை: ஜெ. அறிக்கை ஞாபகத்திற்கு வருகிறது - கருணாநிதி

தூதரக முற்றுகை: ஜெ. அறிக்கை ஞாபகத்திற்கு வருகிறது - கருணாநிதி
தூதரக முற்றுகை: ஜெ. அறிக்கை ஞாபகத்திற்கு வருகிறது - கருணாநிதி
தூதரக முற்றுகை: ஜெ. அறிக்கை ஞாபகத்திற்கு வருகிறது - கருணாநிதி

சென்னை: சென்னையில் 5 நாட்களாக அமெரிக்கத் தூதரக முற்றுகையில் ஈடுபட்டு ஆர்ப்பாட்டங்களில் ஈடுப்பட்டவர்களின் பிரதிநிதிகளை அழைத்து முதல்வர் சமாதானப் பேச்சு நடத்தி இருக்க வேண்டும் என்று கூறியுள்ள திமுக தலைவர் கருணாநிதி,  இது போன்ற நிகழ்வுகள் திமுக ஆட்சிக் காலத்தில் நடைபெற்றபோது, ஜெயலலிதா என்னவெல்லாம் அறிக்கை வெளியிட்டார் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"   "அமெரிக்க துணைத் தூதரகம் 5வது நாளாக முற்றுகை - இரண்டு மணி நேரம் ஸ்தம்பித்தது அண்ணாசாலை - பைக் எரிப்பு, கார், பஸ் உடைப்பு - போலீஸ் தடியடி - ஆஸ்பத்திரியில் பரபரப்பு - இது தலைப்பு. போலீசார் தடியடி நடத்துகின்ற புகைப்படங்கள் ஏடுகளில் எல்லாம் வெளிவந்துள்ளன. “நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தும் அமெரிக்க திரைப்படத்தைக் கண்டித்து 24 முஸ்லீம் அமைப்புகள் சென்னையில் நேற்று (18-9-2012) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. மாலை 4.45 மணியளவில் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பலர் திடீரென அமெரிக்கத் தூதரகத்தை முற்றுகையிடுவதாகக் கூறி அண்ணாசாலை வழியாக ஓடினர். இதைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரால் கட்டுப்படுத்த முடியவில்லை. அண்ணா சாலையில் நிறுத்தப்பட்டிருந்த கார் மீது கல் வீசி தாக்கப்பட்டது.

இதில் தனியார் டி.வி. நிறுவனத்தின் கார் உட்பட இரண்டு கார் கண்ணாடிகள் சேதமடைந்தன. அண்ணா சாலையில் உள்ள கார் நிறுவன கட்டிடத்தின் கண்ணாடிகள் மீது கற்கள் வீசப்பட்டன. இதில் கண்ணாடி உடைந்து அங்கிருந்த ஊழியர் ஒருவர் காயமடைந்தார். இதனால் பதற்றம் ஏற்பட்டு, அண்ணாசாலையில் இருந்த கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து கூட்டத்தைக் கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். அந்தப் பகுதியே போர்க்களம் போல காட்சியளித்தது. இதில் சிலர் மண்டை உடைந்தது. போலீசாருக்கும் காயம் ஏற்பட்டது. இது சென்னை நகரில் ஒரு காட்சி. இது தொடர்ந்து ஐந்து நாட்களாக நடக்கிறது. அரசு சார்பில் இந்த ஐந்து நாட்களாக ஆர்ப்பாட்டம் நடத்துவோரின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி, இந்தப் பிரச்சினையில் ஆவன செய்வதாக உறுதியளித்து சுமூகமாகத் தீர்க்க ஏன் முயற்சிக்கவில்லை?

கிறித்தவ ஆயர் பேரவைத் தலைவர் ஏ.எம். சின்னப்பா நேற்று (18-9-2012) அளித்த பேட்டியில், கூடங்குளத்தில் போலீசார் அத்துமீறி இடிந்தகரை தேவாலயத்தில் நுழைந்ததாகவும், கூடங்குளம் பங்குத் தந்தை இல்லத்திலும் காவலர்கள் அத்துமீறி நுழைந்ததாகவும், போலீசாரின் இந்த நடவடிக்கைகளைக் கண்டித்து, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பாக ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாகத் தெரிவித்துள்ளார்.கூடங்குளம் தேவாலயத்தில் காவலர்கள் உள்ளே நுழைந்தது பற்றி கடந்த சில நாட்களாகப் பேசப்பட்டு வருகிறது. அரசு அவர்களை அழைத்துப் பேசியிருக்க வேண்டாமா? சமாதானப் படுத்தியிருக்க வேண்டாமா?

##~~##
திமுக ஆட்சியிலே இருந்த போது இதுபோல ஒரு நிகழ்ச்சி, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஏற்பட்டால் போதும். உடனடியாக இன்றைய முதல் அமைச்சர் ஜெயலலிதா எப்படியெல்லாம் அறிக்கை விட்டிருக்கிறார்.“இந்தத் துறைக்குப் பொறுப்பேற்றுள்ள “மைனாரிட்டி”அரசின் முதலமைச்சர், இந்தத் தவறுக்குப் பொறுப்பேற்று உடனடியாகப் பதவி விலக வேண்டும்,இல்லாவிட்டால் மத்திய அரசு இந்த அரசின் மீது 356வது பிரிவினைப் பயன்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று எத்தனை அறிக்கைகள் விட்டிருக்கிறார் என்பதுதான் ஞாபகத்திற்கு வருகிறது" என்று கூறியுள்ளார்.