பிரீமியம் ஸ்டோரி

'பொறுத்தது போதும்...

பொங்கி எழு..!’ என்ற வசனம்

சினிமாவுக்கு மட்டுமா?

எனக்கும் சேர்த்தா?

பொங்கிவிடுவேன்...

ஆனால், திடீரென

உங்கள் கண்கள்

இரண்டும் பனித்து

இதயம் இனித்து

மதுரைக்காரரை

மசிய வைத்து

மீண்டும் உள்ளே  ஒரு

கலகம் வந்துவிடுமோ?

என்ற பயத்தால்

நான் என்றுமே

பொங்க மாட்டேன்!

- எம்.பத்மாவதி

டாடி எனக்கு ஒரு டவுட்டு?

அவர்  தாயைக்

காத்த தனயன்!

இவர்  தந்தையைக்

காக்கும் தனயன்!

- பெரியகாஞ்சி பேரலைகொண்டான்

ஓடினேன்... ஓடினேன்...

ஓடினேன்..!

முதல்வர் வேட்பாளராய்

அறிவிக்கக் கேட்டு

வாழ்க்கையின் எல்லை வரை

ஓடினேன்!

கேட்டது கிடைக்கவில்லை...

கிடைத்தது முத்தம்தான்!

- யாழ்நிலா

'தூங்கா நகரம்’

இனி,

'தூங்கவே

தூங்கா நகரம்’!

- வீ.விஷ்ணுகுமார்

டாடி எனக்கு

ஒரு டவுட்டு?

அகவை 63 ஆச்சு...

இறுதிவரை இப்படியே

இளைஞர் அணி

தலைவராகவே

இருந்திடுவேனா?

டெல் மீ டாடி... டெல் மீ..!

- ஆர்.ஷம்மு 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு