Published:Updated:

"தேர்தலில் தோற்றுவிட்டு புதுச்சங்கம் ஆரம்பித்துக் கொள்வார்களா?"

போராட்டக் களத்தில் வழக்கறிஞர் சங்கங்கள்

பிரீமியம் ஸ்டோரி

லுவான கட்டமைப்​புடன் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்துக்குள் செயல்பட்டு வந்த வழக்கறிஞர் சங்கங்கள் இன்று சகோதரச் சண்டையில் பிளவுபட்டுக் கிடக்கிறது.

அங்கீகாரம் பெற்ற 248 வழக்கறிஞர் சங்கங்கள் தமிழகத்தில் செயல்பட்டு வருகின்றன. அவற்றில், சென்னை உயர் நீதிமன்ற வளாகத்துக்குள் இயங்கும் மெட்ராஸ் பார் அசோஸியேஷன் (எம்.பி.ஏ.), சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் (எம்.ஹெச்.ஏ.ஏ.) லா அசோஸியேஷன் (எல்.ஏ), பெண் வழக்கறிஞர்கள் சங்கம் (டபுள்யூ.எல்.ஏ.) போன்றவை வரலாற்றுப் பெருமை மிக்கவை.

"தேர்தலில் தோற்றுவிட்டு புதுச்சங்கம் ஆரம்பித்துக் கொள்வார்களா?"

கடந்த 2007-ம் ஆண்டு, மூத்த வழக்கறிஞர் பிரபாகரன் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தில் இருந்து பிரிந்து தனியாக தமிழ்நாடு வழக்கறிஞர் சங்கத்தைத் தொடங்கினார். இந்த நிலையில் கடந்த 8ம் தேதி, தமிழ்நாடு பார் கவுன்சில், தமிழ்நாடு வழக்கறிஞர் சங்கத்துக்கு முறைப்படியான அங்கீகாரம் வழங்கியதும் வழக்கறிஞர் சங்கங்கள் பிளவுபட்டு நிற்கத் தொடங்கிவிட்டன.

தமிழ்நாடு வழக்கறிஞர் சங்கத்துக்கு அங்கீகாரம் வழங்கிய பார் கவுன்சிலின் முடிவைக் கடுமையாக எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் உள்ளிட்ட நான்கு சங்கங்களும் போராட்டத்தில் குதித்துள்ளன. உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், பேரணி என்று தொடங்கிய போராட்டம், கடந்த வெள்ளிக்கிழமை பார் கவுன்சில் முற்றுகைப் போராட்டமாக உருமாறி, கல்வீச்சு, கலவரம் என்றாகி பதற்றமான சூழலை மீண்டும் உயர் நீதிமன்ற வளாகத்தில் உருவாக்கி உள்ளது.

தமிழ்நாடு வழக்கறிஞர் சங்கத்துக்கு அங்கீகாரம் வழங்கியதில் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்துக்கு என்ன பிரச்னை என்று அதன் தலைவர் வழக்கறிஞர் பால் கனகராஜிடம் கேட்டோம்.

"தேர்தலில் தோற்றுவிட்டு புதுச்சங்கம் ஆரம்பித்துக் கொள்வார்களா?"

''சங்கம் ஆரம்பிப்பதை நாங்கள் எதிர்க்கவில்லை. அதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டதையும் அதன்பின்னால் நடைபெற்றுள்ள முறைகேடு​களையும்தான் நாங்கள் எதிர்க்கிறோம். 2007-ல் என்னிடம் தேர்தலில் தோற்றுவிட்டு, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவராக வர முடியாத விரக்தியில் தமிழ்நாடு வழக்கறிஞர் சங்கத்தை பிரபாகரன் ஆரம்பித்தார். அவருடைய சங்கத்துக்கு அங்கீகாரம் வழங்கியதன் மூலம் இப்போது வழக்கறிஞர்களைப் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு தமிழ்நாடு பார் கவுன்சில் நிர்வாகிகள் துணைபோய் உள்ளனர். இனி, பிரபாகரன் தன்னிச்சையாக முடிவுகளை எடுத்து அறிவிப்பார். இதனால், வழக்கறிஞர் மத்தியில் செல்வாக்குடன் திகழும் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் எடுக்கும் முடிவுகளில் குழப்பம் ஏற்படும்.

2008, 2012-ம் ஆண்டுகளில் அந்தச் சங்கத்துக்கு தமிழ்நாடு பார் கவுன்சில் அங்கீகாரம் வழங்க மறுத்துவிட்டது. அன்று இருந்த அதே நிர்வாகிகள்தான் இன்றும் இருக்கின்றனர். ஆனால், அன்று மறுத்தவர்கள் இன்று வழங்குவதற்கு என்ன காரணம்? அதன் பின்னால் உள்ள பேரம் என்ன? இந்த முறைகேடுகளை சி.பி.ஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும்'' என்றார்.

"தேர்தலில் தோற்றுவிட்டு புதுச்சங்கம் ஆரம்பித்துக் கொள்வார்களா?"

இதுபற்றி, தமிழ்நாடு வழக்கறிஞர் சங்கத் தலைவர் பிரபாகரனிடம் கேட்டோம்.  ''2007-ம் ஆண்டு நான் தொடங்கிய தமிழ்நாடு வழக்கறிஞர் சங்கத்துக்கு அப்போது இருந்தே பார் கவுன்சிலிடம் அங்கீகாரம் கேட்டு வருகிறேன். இரண்டு முறை அங்கீகாரம் மறுக்கப்பட்டது. வழக்கறிஞர் சேமநல நிதி ஸ்டாம்பை, நீங்கள் தமிழகம் முழுவதும் விற்றுவிடுவீர்கள். அதனால் மற்ற சங்கங்கள் பாதிக்கப்படும்’ என்று காரணம் சொன்னார்கள். இதையடுத்து, நாங்கள் சென்னையில் மட்டுமே இனி செயல்படுவோம் என்று தீர்மானம் நிறைவேற்றி, அதை பார் கவுன்சிலுக்கு தெரிவித்தோம். அதை ஏற்றுக்கொண்டு எங்களுக்கு அங்கீகாரம் அளித்துள்ளனர். ஒரு சங்கத்தின் நடவடிக்கையையும் அதற்கு அனுமதி அளிக்கும் பார் கவுன்சிலின் அதிகாரத்தையும் கேள்வி கேட்க மற்றொரு சங்கத்துக்கு எந்த அதிகாரமும் இல்லை'' என்றார்.

இதுபற்றி, தமிழ்நாடு வழக்கறிஞர் சங்கத்தைச் சேர்ந்த செந்தில்குமார், ''7 பேர் இருந்தால் அவர்கள் தனியாக ஒரு சங்கம் அமைக்கலாம் என்று சொசைட்டி சட்டம் சொல்கிறது.

2009-ம் ஆண்டு உயர் நீதிமன்றத்துக்குள் போலீஸ் நடத்திய தடியடி வழக்கில், உச்ச நீதிமன்றம் வரை சென்று அந்தச் சம்பவத்தை மறு விசாரணை செய்ய வேண்டும் என்று நாங்கள் உத்தரவு வாங்கினோம். அதில், பல உயர் காவல் துறை அதிகாரிகளுக்கு தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதனால், அவர்கள் பின்னால் இருந்துகொண்டு சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் பால் கனகராஜ், நளினி, பிரசன்னா ஆகியோரைப் பயன்படுத்தி எங்களுக்கு எதிராகப் பிரச்னையைத் தூண்டிவிடுகின்றனர் என்ற சந்தேகம் உள்ளது'' என்றார்.

அங்கீகாரம் வழங்கிய தமிழ்நாடு பார் கவுன்சில் தலைவர் செல்வம், ''பார் கவுன்சில் கமிட்டி கொடுத்த அறிக்கையின் அடிப்படையில், உரிய விதிமுறைகளைப் பின்பற்றித்தான், தமிழ்நாடு வழக்கறிஞர் சங்கத்துக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது. அதில் எந்த வழக்கறிஞருக்காவது மாற்றுக் கருத்து இருந்தால், சட்டம் படித்த அவர்கள் சட்டப்படியான தீர்வுகாண நீதிமன்றத்தை அணுகலாம். அதற்கு இங்குள்ள 90 ஆயிரம் வழக்கறிஞர்களுக்கும் உரிமை உள்ளது. ஆனால் அதைவிடுத்து, பார் கவுன்சில் மீது கல்லெறிவதும், அதன் உடைமைகளைச் சேதப்படுத்துவதும் வன்மையாகக் கண்டிக்கத்​தக்கது'' என்றார்.

எப்போதுமே சர்ச்சையும் சச்சரவும்தானா?

ஜோ.ஸ்டாலின், படங்கள்: சொ.பாலசுப்பிரமணியன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு