Published:Updated:

குஜராத்தில் வளர்ச்சி தொடர பா.ஜ.க-வுக்கு ஆதரவு - மோடி பிரசாரம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
குஜராத்தில் வளர்ச்சி தொடர பா.ஜ.க-வுக்கு ஆதரவு - மோடி பிரசாரம்!
குஜராத்தில் வளர்ச்சி தொடர பா.ஜ.க-வுக்கு ஆதரவு - மோடி பிரசாரம்!

குஜராத்தில் வளர்ச்சி தொடர பா.ஜ.க-வுக்கு ஆதரவு - மோடி பிரசாரம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

குஜராத் மாநிலத்தில் விரைவில் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அங்கு அரசியல் கட்சிகளின் பிரசாரம் முக்கியக் கட்டத்தை எட்டியுள்ளது.

பா.ஜ.க ஆட்சி செய்யும் குஜராத் மாநிலத்தில், கடந்த 22 ஆண்டுகளாக நடைபெற்றுள்ள வளர்ச்சித் திட்டங்கள் கண்கூடாகத் தெரிவதாகவும், அதைக் கருத்தில்கொண்டு, வரும் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

குஜராத் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் மேற்கொள்ளப்பட்ட பா.ஜ.க-வின் கௌரவ் யாத்திரை, அகமதாபாத்தில் நிறைவடைந்தது. யாத்திரையின் நிறைவுவிழாவில் பேசிய பிரதமர் மோடி, குஜராத்தில் பா.ஜ.க நிறைவேற்றியுள்ள வளர்ச்சித் திட்டங்களைப் பட்டியலிட்டார்.

குஜராத்தில் நடைபெறவிருப்பது வளர்ச்சிக்கும் குடும்ப ஆட்சிக்கும் இடையேயான தேர்தல் என்றும், ஒரு குடும்பத்தை எதிர்த்து, வளர்ச்சித் திட்டங்களுக்காக நடைபெறும் அரசியல் என்றும் மோடி கூறினார். 

காங்கிரஸ் கட்சி வளர்ச்சித் திட்டங்களுக்கு எதிராகச் செயல்பட்டு, பா.ஜ.க அரசுமீது குறைகூறி வருவதாக அவர் குறிப்பிட்டார். 

காங்கிரஸ் கட்சி, ஊழலில் ஊறித் திளைத்தது என்றும் குஜராத் மாநிலத்தின் மேம்பாட்டுக்கு காங்கிரஸால் எந்த நன்மையையும் செய்து விட முடியாது என்றும் பிரதமர் குறைகூறினார். 

2014-ம் ஆண்டு முதல், நாடு வளர்ச்சியை நோக்கிப் பயணித்துவருவதாகக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, அரசின் சாதனைகளை காங்கிரஸ் வேண்டுமென்றே மறைத்து, எதிர்மறையான பிரசாரம் செய்துவருகிறது என்றார். 

பா.ஜ.க-வைப் பொறுத்தவரை ஜனநாயக அடிப்படையிலான கட்சி என்றும், காங்கிரஸ் கட்சியில் குடும்ப ஆட்சி தொடர்வதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார். 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு