Published:Updated:

பரபரப்பான சூழலில் தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பரபரப்பான சூழலில் தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!
பரபரப்பான சூழலில் தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

பரபரப்பான சூழலில் தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தமிழகத்தில் டெங்கு பாதிப்பு, அரசின் செயல்பாடற்ற தன்மை, ஆட்சிக்குப் போதிய எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு இல்லாத நிலை போன்ற பரபரப்பான அரசியல் சூழலில், தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், வரும் 20-ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.

அண்ணா அறிவாலயத்தில், தி.மு.க செயல்தலைவரும் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவிருக்கும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், தமிழகத்தில் எந்த நேரத்திலும் சட்டசபைத் தேர்தல் நடைபெறலாம் என்பதால், தி.மு.க அதற்குத் தயாராக வேண்டும் என்று அறிவுறுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

2016-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலுக்கு முன், 'நமக்கு நாமே' பயணம் மேற்கொண்டது போன்று, மீண்டும் ஒரு சுற்றுப்பயணத்தை ஸ்டாலின் மேற்கொள்வது பற்றியும் மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தப்படும் என்று தெரிகிறது. தவிர, பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், மாவட்டங்களில் தி.மு.க எவ்வாறு செயலாற்றுவது என்பது பற்றியும் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்பட இருப்பதாக, தி.மு.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு