Published:Updated:

அரசியல் கட்சிகளின் அதிரவைக்கும் சொத்துப் பட்டியல்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
அரசியல் கட்சிகளின் அதிரவைக்கும் சொத்துப் பட்டியல்!
அரசியல் கட்சிகளின் அதிரவைக்கும் சொத்துப் பட்டியல்!

அரசியல் கட்சிகளின் அதிரவைக்கும் சொத்துப் பட்டியல்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ங்கீகரிக்கப்பட்ட தேசியக் கட்சிகள், தம் சொத்து மதிப்பை தேர்தல் கமிஷனிடம் அளித்துள்ளன. கடந்த 11 ஆண்டுகளில், தேசியக் கட்சிகளின் சொத்து மதிப்பு அபரிமிதமான வளர்ச்சி கண்டுள்ளது. 2004 முதல் 2016-ம் ஆண்டு வரை தேசியக் கட்சிகளின் சொத்து மதிப்பு உயர்ந்ததன் அடிப்படையில்... பாரதிய ஜனதா கட்சி, நாட்டிலேயே பணக்காரக் கட்சியாக மாறியுள்ளது. 2004-ம் ஆண்டு ரூ.122 கோடியே 93 லட்சம் சொத்துகள் பாரதிய ஜனதா கட்சிக்கு இருந்தது. தற்போது, அந்தக் கட்சியின் சொத்து மதிப்பு ரூ.893 கோடியே 88 லட்சமாக உயர்ந்துள்ளது. 

இதே காலகட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் சொத்து மதிப்பு, ரூ.167 கோடியிலிருந்து ரூ.758 கோடியே 79 லட்சமாக உயர்ந்திருக்கிறது. கடந்த 11 ஆண்டுகளில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சொத்து மதிப்பு, 383 சதவிகிதம் உயர்வு கண்டுள்ளது. அதாவது, 90 கோடியிலி ருந்து ரூ.437 கோடியாக அதிகரித்துள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சொத்து மதிப்பு, ரூ.25 லட்சமாக இருந்தது. தற்போது, ரூ.44 கோடியே 99 லட்சமாக உயர்ந்திருக்கிறது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ரூ. 5 கோடியே 56 லட்சத்திலிருந்து ரூ.10 கோடியே 18 லட்சமாக உயர்ந்துள்ளது. தேசியவாத காங்கிரஸ் கட்சி, ஒரு கோடியே 60 லட்சம் சொத்துகள் வைத்திருந்தது. தற்போது, ரூ.14 கோடியே 54 லட்சமாக அதிகரித்திருக்கிறது. பகுஜன் சமாஜ் கட்சியின் சொத்து மதிப்பும் அதிக வளர்ச்சி கண்டிருக்கிறது. ரூ.43 கோடியே 9 லட்சமாக இருந்த இந்தக் கட்சியின் சொத்து மதிப்பு, தற்போது ரூ.559 கோடி. 

இந்த விவரங்களை ஜனநாயக சீர்திருத்தச் சங்கம், தேர்தல் கண்காணிப்பகம் ஆகிய தொண்டு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு