Published:Updated:

டெங்குவை நாங்களும் ஒழிப்போம்! சொல்கிறார் தமிழிசை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
டெங்குவை நாங்களும் ஒழிப்போம்! சொல்கிறார் தமிழிசை
டெங்குவை நாங்களும் ஒழிப்போம்! சொல்கிறார் தமிழிசை

டெங்குவை நாங்களும் ஒழிப்போம்! சொல்கிறார் தமிழிசை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

டெங்குவை நாங்களும் ஒழிப்போம்! சொல்கிறார் தமிழிசை

''மத்திய, மாநில அரசுகள் இணைந்து டெங்குவை ஒழிக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்வோம்'' என்று தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் உயிரிழப்பு அதிகரித்துவருகிறது. டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த, மத்திய அரசிடம் ரூ.256 கோடி கேட்டுள்ளது தமிழக அரசு. இந்த நிலையில், சென்னையில் இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய, மாநில அரசுகள் இணைந்து டெங்குவை ஒழிக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்வோம் என்று தெரிவித்தார்.

இந்தித் திணிப்புகுறித்த கேள்விக்குப் பதில் அளித்த தமிழிசை, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் மீண்டும் இந்தியைவைத்து அரசியல் செய்யத் தொடங்கியுள்ளார் என்றும், அரசியலில் பிழைக்க தமிழ்மீது பொய் பற்றாளராக உள்ளார் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

ஸ்டாலினைவிட பா.ஜ.க-வினருக்கு தமிழ் மொழிமீது மரியாதையும் மதிப்பும் உள்ளது என்றும் தமிழிசை தெரிவித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு