Published:Updated:

ஆர்.கே.நகர் தேர்தல் தேதிக்கு முன்பே வேட்பாளரை அறிவித்தார் சீமான்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஆர்.கே.நகர் தேர்தல் தேதிக்கு முன்பே வேட்பாளரை அறிவித்தார் சீமான்!
ஆர்.கே.நகர் தேர்தல் தேதிக்கு முன்பே வேட்பாளரை அறிவித்தார் சீமான்!

ஆர்.கே.நகர் தேர்தல் தேதிக்கு முன்பே வேட்பாளரை அறிவித்தார் சீமான்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஆர்.கே.நகர் தேர்தல் தேதிக்கு முன்பே வேட்பாளரை அறிவித்தார் சீமான்!

'ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால், கலைக்கோட்டுதயம் போட்டியிடுவார்' என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், காலித் தொகுதியாக அறிவிக்கப்பட்டது ஆர்.கே.நகர். இதைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் 12-ம் தேதி ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அ.தி.மு.க அம்மா அணியின் டி.டி.வி தினகரன், அ.தி.மு.க புரட்சித் தலைவி அம்மா அணியின் மதுசூதனன், தி.மு.க வேட்பாளராக மருதுகணேஷ், நாம் தமிழர் கட்சி சார்பில் கலைக்கோட்டுதயம் உள்ளிட்ட 62 பேர் களத்தில் இருந்தனர். ஆனால், வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா செய்த புகாரின் பேரில், கடந்த ஏப்ரல் 10-ம் தேதி தேர்தலை ரத்துசெய்தது தேர்தல் ஆணையம்.

இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு இமாச்சலப்பிரதேச மாநிலத்தின் சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் அச்சல் குமார் ஜோதி அறிவித்தார். அப்போது, டிசம்பர் 31-ம் தேதிக்குள் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

இதனிடையே, செய்தியாளர்களிடம் இன்று பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால், கலைக்கோட்டுதயம் போட்டியிடுவார் என்று அறிவித்தார்.

அ.தி.மு.க-வின் 46-வது ஆண்டு தொடக்கவிழா குறித்த கேள்விக்குப் பதில் அளித்த சீமான், அ.தி.மு.க தொடக்க விழா கொண்டாடுவதைவிட, மூடு விழா கொண்டாடுவதே நல்லது என்று சாடினார்.

டெங்கு குறித்த மத்திய மருத்துவக் குழுவின் ஆய்வு பற்றிய கேள்விக்கு, அரசு நியமிக்கும் மருத்துவக்குழு, அரசுக்கு எதிராக எப்படி அறிக்கை அளிக்கும் என்று சீமான் கேள்வி எழுப்பினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு