Published:Updated:

‘ஆதரவாளர்களுக்கு தினகரன் விடுத்த இரண்டு நாள் கெடு!’ - பரபர பின்னணி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
‘ஆதரவாளர்களுக்கு தினகரன் விடுத்த இரண்டு நாள் கெடு!’ - பரபர பின்னணி
‘ஆதரவாளர்களுக்கு தினகரன் விடுத்த இரண்டு நாள் கெடு!’ - பரபர பின்னணி

‘ஆதரவாளர்களுக்கு தினகரன் விடுத்த இரண்டு நாள் கெடு!’ - பரபர பின்னணி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சசிகலா சிறைக்குச் சென்றபிறகு, கடந்த இரண்டு நாள்களாக ஆதரவாளர்களை தினகரன் சந்திக்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. தீபாவளி வாழ்த்துகள் சொல்ல அனுமதிப்பாரா என்ற ஏக்கத்தில் ஆதரவாளர்கள் உள்ளனர்.

பரோலில் வெளியில் வந்த சசிகலாவுக்கும் தினகரனுக்கும் முட்டல் மோதல் என்ற தகவல் வெளியானது. இதனால்தான் சென்னையிலிருந்து பெங்களூருக்கு காரில் சென்ற சசிகலாவுடன் தினகரன் செல்லவில்லை என்றும் சொல்லப்பட்டது. ஆனால், தினகரனுக்கு சில முக்கிய ஆலோசனைகளைச் சொல்லிவிட்டுச் சென்றுள்ளார் சசிகலா என்கின்றனர், தினகரனுக்கு நெருக்கமானவர்கள். இதனால், தினகரனின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதிரடி அரசியலில் அவர் ஈடுபடுவதைக் குறைத்துள்ளார். இருப்பினும் தினகரனுக்கு எதிராக அரக்கோணம், திருச்சி என காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுவருகின்றன. இது, தினகரன் ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சூழ்நிலையில், தினகரனுக்கு தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவிக்க அவரது ஆதரவாளர்கள் அனுமதி கேட்டிருந்தனர். ஆனால், இதுவரை அதற்கு கிரீன் சிக்னல் கொடுக்கப்படவில்லை. 16, 17 ஆகிய இரண்டு தினங்கள் தன்னை யாரும் சந்திக்க வர வேண்டாம் என்று தினகரன் தரப்பிலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தீபாவளி வாழ்த்துகள் சொல்லத் தயாராக இருந்த ஆதரவாளர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். அனுமதி கிடைக்குமா என்ற ஏக்கத்தில் ஆதரவாளர்கள் இருக்கின்றனர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய தினகரன் ஆதரவாளர்கள் கூறுகையில், கடந்த இரண்டு நாள்களாக தினகரன், முக்கிய நிர்வாகிகளைத் தவிர மற்றவர்கள் யாரையும் சந்திக்கவில்லை. இதனால், தீபாவளி வாழ்த்துகள் சொல்ல அனுமதி கேட்டவர்களுக்கு இதுவரை நேரம் ஒதுக்கப்படவில்லை. இன்று மாலையிலிருந்து அவர், நிர்வாகிகளையும் ஆதரவாளர்களையும் சந்திப்பதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது. சிறையிலிருந்து சசிகலா வெளியில் வந்தபிறகு, தினகரனின் நடவடிக்கைகளில் மாற்றம் தெரிகிறது. நீண்ட ஆலோசனைக்குப்  பிறகே, எந்த விவகாரத்திலும் தலையிடுகிறார். குறிப்பாக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணியினருக்கு உடனுக்குடன் பதிலடி கொடுக்கும் தினகரன், அமைதியாகிவிட்டார்.

அ.தி.மு.க-வின் 46-வது ஆண்டு விழாவை சிறப்பாகக் கொண்டாடத் திட்டமிட்டிருந்தோம். தினகரனிடமிருந்து எந்தத் தகவலும் வராததால், அவருடைய ஆதரவாளர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். கட்சித் தலைமை அலுவலகத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் ஆண்டு விழாவை சிறப்பாகக் கொண்டாடியுள்ளனர். டெங்கு காய்ச்சலுக்கு, இலவசமாக நிலவேம்புக் கசாயத்தைக் கொடுக்க தினகரன் உத்தரவிட்டதும், சிறப்பான ஏற்பாடுகளை நிர்வாகிகள் செய்தனர். அதற்கு, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துள்ளது. மக்கள் பணிகளில் மட்டுமே கவனத்தைச் செலுத்த தினகரன் முடிவுசெய்துள்ளார்" என்றனர்.

தினகரனுக்கு நெருக்கமானவர்களிடம் பேசினோம் "இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பாக சட்ட நிபுணர்களுடன் தீவிர ஆலோசனையில் இருந்தார். அதனால்தான், ஆதரவாளர்களைக் கடந்த இரண்டு தினங்களாகச் சந்திக்கவில்லை. தேர்தல் ஆணையத்துக்கு சட்ட நிபுணர்களுடன் தனக்கு நம்பிக்கைக்குரிய டீமை தினகரன் அனுப்பியுள்ளார். தினகரன் தரப்பு வாதத்தால், இரட்டை இலை சின்னம் விசாரணை, வரும் 23-ம் தேதிக்கு தள்ளிப்போடப்பட்டுள்ளது. 

தினகரன், இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுக்கப் பல வகையில் முயற்சிசெய்துள்ளோம். நிச்சயம் எங்களுக்கு இரட்டை இலை கிடைக்கும். அ.தி.மு.க அம்மா அணி சார்பில் பொதுக்குழுவைக் கூட்ட ஆலோசிக்கப்பட்டுவருகிறது. அதில், கட்சிக்குத் துரோகம் செய்தவர்களுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்படும். டெங்குகுறித்த விழிப்புஉணர்வு நோட்டீஸை விநியோகித்தால், தினகரன் மீது எடப்பாடி பழனிசாமி அரசு வழக்குப்பதிவு செய்கிறது. அதையெல்லாம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். மக்கள் நலனில் இந்த அரசுக்கு அக்கறை இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ., வழக்கில், எங்களுக்குச் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். கட்சியின் ஆண்டு விழாவை இன்று முதல் சிறப்பாகக் கொண்டாட ஏற்பாடுகள் நடந்துவருகின்றன" என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு