Published:Updated:

காவிரி பிரச்னைக்கு நீதிமன்றத்தை நாடக்கூடாது: எஸ்.எம். கிருஷ்ணா

காவிரி பிரச்னைக்கு நீதிமன்றத்தை நாடக்கூடாது: எஸ்.எம். கிருஷ்ணா
காவிரி பிரச்னைக்கு நீதிமன்றத்தை நாடக்கூடாது: எஸ்.எம். கிருஷ்ணா
காவிரி பிரச்னைக்கு நீதிமன்றத்தை நாடக்கூடாது: எஸ்.எம். கிருஷ்ணா

பெங்களூரு: தமிழகம்-கர்நாடகா ஆகிய இரு மாநிலங்களும் காவிரி பிரச்னை தொடர்பாக  நீதிமன்றங்களை நாடாமல், கர்நாடகமும் ஒன்றாக அமர்ந்து பேசி ஒரு புதிய முறையை  நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சரும்,கர்நாடக  முன்னாள் முதல்வருமான எஸ்.எம். கிருஷ்ணா கூறியுள்ளார்.

காவிரி நதிநீரை பங்கிட்டுக் கொள்வது தொடர்பாக நீதிமன்றங்களை நாடாமல், இரு  மாநிலங்களும் சுமூகமான முறையை நடைமுறைப்படுத்துவதே சிறந்த வழியாகும்.

##~~##
கர்நாடக மாநிலத்தில் உள்ள பிலிகுண்டுவில் இருந்து தினமும் 4500 கன அடி தண்ணீர்  தமிழகத்துக்கு திறந்து விட வேண்டும்.மீதம் 4,500 கன அடி நீர், மற்ற அணைகளில்  இருந்து வெளியாகும் நீர் கசிவு மூலம் தமிழகத்துக்குக் கிடைத்துவிடும் என்று யோசனை  தெரிவித்துள்ள கிருஷ்ணா,காவிரி நதிநீர் பங்கீட்டு ஆணையத்தின் தீர்ப்பை எதிர்த்து  கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால் அதற்கு ஆதரவு  தெரிவிப்பதாகவும் சூசகமாகத் தெரிவித்துள்ளார்.