Published:Updated:

ராபர்ட் வதேரா விவகாரம் : காங்கிரஸ் மௌனம் ஏன்? - நிர்மலா சீதாராமன் கேள்வி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ராபர்ட் வதேரா விவகாரம் : காங்கிரஸ் மௌனம் ஏன்? - நிர்மலா சீதாராமன் கேள்வி
ராபர்ட் வதேரா விவகாரம் : காங்கிரஸ் மௌனம் ஏன்? - நிர்மலா சீதாராமன் கேள்வி

ராபர்ட் வதேரா விவகாரம் : காங்கிரஸ் மௌனம் ஏன்? - நிர்மலா சீதாராமன் கேள்வி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஆயுதபேரத்தில் சிக்கித் தலைமறைவாக உள்ள சஞ்சய் பண்டாரியுடன், பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேராவுக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுவது பற்றிக் காங்கிரஸ் கட்சி வாய்திறக்காதது ஏன் என்று பா.ஜ.க கேள்வி எழுப்பியுள்ளது. பா.ஜ.க மூத்த தலைவரும், பாதுகாப்புத்துறை அமைச்சருமான நிர்மலா சீதாராமன், புதுடெல்லியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், லண்டனில் உள்ள சஞ்சய் பண்டாரியின் வீட்டில் அவரை ராபர்ட் வதேரா சந்தித்ததாகத் தகவல்கள் வெளியாகி இருப்பதைச் சுட்டிக்காட்டினார்.

ராபர்ட் வதேராவின் விமானப் பயணத்துக்கு பண்டாரி டிக்கெட் வாங்கிக் கொடுத்ததாகச் செய்திகள் வெளியாகியிருப்பது பற்றி காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவிக்காமல் மௌனம் சாதிப்பது ஆச்சர்யம் அளிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார். இப்பிரச்னைகுறித்து காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தினார். இதனிடையே, ராபர்ட் வதேரா இந்த விவகாரத்தில் ஏதேனும் தவறுசெய்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தால், பிரதமர் நரேந்திர மோடி எந்த விசாரணையையும் நடத்தட்டும் என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு